கன்னாபின்னாவென விற்கும் எலக்ட்ரிக் வாகனங்கள்: மிரள வைக்கும் வளர்ச்சி

Electric Vehicles: பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2022, 02:24 PM IST
  • மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
  • இரு சக்கர வாகன தயாரிப்பில் 55க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
  • பல புதிய நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பு மற்றும் உற்பத்தியில் இறங்கியுள்ளன.
கன்னாபின்னாவென விற்கும் எலக்ட்ரிக் வாகனங்கள்: மிரள வைக்கும் வளர்ச்சி title=

மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டில் 1,19,652 ஆக இருந்த மின்சார வாகன யூனிட்களின் சில்லறை விற்பனை , 2021 ஆம் ஆண்டில் 160 சதவிகிதம் அதிகரித்து 3,11,350 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் இரண்டிலும் உள்ளது. பல புதிய நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பு மற்றும் உற்பத்தியில் இறங்கியுள்ளன. 

குறிப்பாக இரு சக்கர வாகன தயாரிப்பில் 55க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஹீரோ எலக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, ஆம்பியர் வெஹிகல்ஸ், கைனடிக் கிரீன் எனர்ஜி & பவர் சொல்யூஷன்ஸ், ஒகினாவா ஆட்டோடெக் மற்றும் லெக்ட்ரோ இ-மொபிலிட்டி ஆகியவை இந்த துறையில் உள்ள சில முன்னணி நிறுவனங்களாகும்.

பிரிவு வாரியாக, மின்சார இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 425 சதவீதம் அதிகரித்தது. 2020 ஆம் ஆண்டு 27,269 யூனிட்களாக இருந்த விற்பனை, 2021ல் 1,43,271 யூனிட்களாக இருந்தது. இதேபோல், மூன்று சக்கர மின்சார வாகன பிரிவில், சில்லறை விற்பனை 2021-ல் 74 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 88,139 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு இது 1,53,432 யூனிட்களாக அதிகரித்தது. சமீபத்திய வாகன தரவுகள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மூலம் அளிக்கப்படுள்ளன. 

மேலும் படிக்க | Optima: மகிந்திராவும் ஹீரோவும் இணைந்து வழங்கும் மிக மலிவான மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் 

எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனப் பிரிவில் முன்னணியில் இருக்கும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஓராண்டில் கணிசமாக வளர்ந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நிதித் திட்டங்களை வழங்குவதற்காக சமீபத்தில் பல வங்கிகளுடன் நிறுவனம் இணைந்துள்ளது.

 இந்த மாதம் இதுவரை, நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஓட்டோ கேபிடல் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

தரவுகளின்படி, மின்சார பயணிகள் வாகனம் (பிவி) பிரிவு 2020 இல் இருந்த 4,121 யூனிட்களுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 201 சதவீதம் அதிகரித்து 12,424 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. மின்சார வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2021 வரை 14,880 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகக் கூறியுள்ளது. இதேபோல், எம்ஜி மோட்டார் 2020 முதல் 4,000க்கும் அதிகமான மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

முன்னணி மதிப்பீடு மற்றும் ஆலோசனை நிறுவனமான RBSA ஆலோசகர்களின் கூற்றுப்படி, இந்திய மின்சார வாகன சந்தை 2030 ஆம் ஆண்டளவில் $150 பில்லியனுக்கும் அதிகமான அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Best E Bikes: இவைதான் நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்: விலை, பிற விவரங்கள் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News