தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த சில வருடங்களில் நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மலிவு விலையில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிவித்து மக்களை கவர்ந்துள்ளது. ஜியோவில் இருக்கும் சில திட்டங்களை ரீச்சார்ஜ் செய்தால், ஐபிஎல் போட்டியை இலவசமாக காண முடியும்.
மேலும் படிக்க | ஜியோ மாஸ் திட்டங்கள்! ரூ.300-க்கு கீழ் இவ்வளவு திட்டங்கள்
ஜியோ ரூ.399 திட்டம்
இந்த ஜியோ திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 75 ஜிபி அதிவேக டேட்டா பெறுவார்கள். போஸ்பெய்ட் திட்டமான இதில், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். கூடுதல் வசதி என்னவென்றால், 200 ஜிபி டேட்டாவை ரோல்ஓவர் வசதி செய்துகொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிக்கொள்ளலாம். ஒருவேளை டேட்டா தீர்ந்துவிட்டால், பயன்படுத்தும் ஒரு ஜிபி டேட்டாவுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
OTT அணுகல்
ஜியோவின் 399 ரூபாய் திட்டத்தில் நீங்கள் அமேசான், நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை பெற்றுக் கொள்வீர்கள். இலசமாக கிடைக்கும் இந்த சப்ஸ்கிரிப்சன் மூலம் ஐபிஎல் மற்றும் புதிதாக ரிலீஸாகும் படங்களை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | JIO vs AIRTEL vs VI: ரூ.300 கீழ் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR