JioFiber பிளானில் இவ்ளோ சிறப்பம்சங்களா?

ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1499, ரூ.2499, ரூ.3999 மற்றும் ரூ.8999 விலையில் உயர்தர பிராட்பேண்ட் திட்டங்களைக் வழங்குகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 04:27 PM IST
  • Airtel XStream, JioFiber மற்றும் BSNL போன்ற ISP-க்கள் Disney + Hotstar சேவையை வழங்குகிறது.
  • JIO தவிர வேறு எந்த பிராட்பேண்ட்ம் வாடிக்கையாளர்களுக்கு Netflix சேவையை வழங்கவில்லை
JioFiber பிளானில் இவ்ளோ சிறப்பம்சங்களா? title=

பொதுவாக வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் திட்டங்களில் வழக்கமான டேட்டா மற்றும் அழைப்புகளுடன் ஸ்ட்ரீமிங் வசதியையும் எதிர்பார்ப்பார்கள்.  ஆனால் சில இணையதள சேவைகளை வழங்குபவர்கள்(ISP) மட்டுமே இதுபோன்ற ஸ்ட்ரீமிங் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.  Airtel XStream, JioFiber மற்றும் BSNL போன்ற ISP-க்கள் மொபைல் அல்லது மற்ற சாதனங்களுக்கு Disney+ Hotstar சேவையை வழங்குகிறது.

ALSO READ | Jio அசத்தல் Plan; பல அற்புத நன்மைகளை பெறலாம்; Airtel-Viக்கு ஆப்பு

BSNL வழங்கும் பிராட்பேண்ட் திட்டம்  வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar Premium சேவையை தருகிறது.  Airtel premium-ன் பிராட்பேண்ட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar Super மற்றும் Amazon Prime சேவைகளை வழங்குகிறது.  Jio Fiber வாடிக்கையாளர்களுக்கு  சந்தா செலுத்தும் தொகையின் அடிப்படையில் OTT ஆப்களை வழங்குகிறது.  மேலும் இது Netflix சேவையையும் வழங்குகிறது.  இதுபோன்று வேறு எந்த இணைய சேவையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் திட்டங்களுடன் Netflix சேவையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பிராட்பேண்ட் திட்டங்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் சந்தாவைப் பெறலாம்.  Jio Fiber தற்போது பிராட்பேண்ட் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 15 நாட்கள் (அரையாண்டு) மற்றும் 30 நாட்கள் (வருடாந்திர) கூடுதல் வேலிடிட்டியை வழங்கியுள்ளது.

JioFiber ரூ.999 பிராட்பேண்ட் திட்டம்: 

ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம், 150Mbps வரை பதிவிறக்கம் செய்யவும், அதிக வேகத்துடன் பதிவேற்றம் செய்யவும் முடியும்.  மேலும் இதில் அன்லிமிடெட்  அழைப்புகளுடன்,  Amazon Prime, Disney+ Hotstar, Sony LIV, Zee5, Alt Balaji போன்ற ரூ.1000 மதிப்புள்ள 14 OTT சேவைகளை வழங்குகிறது.

JioFiber ரூ.1499 பிராட்பேண்ட் திட்டம்:

ரூ.1499 பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 300 Mbps வரையிலான பதிவிறக்கம் செய்யவும், அதிக வேகத்துடன் பதிவேற்றம் செய்யவும் முடியும்.  மேலும் இதில் அன்லிமிடெட் அழைப்புகளுடன், கூடுதல் கட்டணமின்றி 15 OTT சேவைகளை வழங்குகிறது. Netflix , Amazon Prime, Disney+ Hotstar, Sony Liv, Jio Cinema, Zee5 போன்றவை.  BSNLன் ரூ. 1499 பிராட்பேண்ட் திட்டம் 300 Mbps வேகத்துடன் 4TB அல்லது 4000GB வரை வழங்குகிறது. FUPஐ அடைந்த பிறகு, வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படுகிறது.  இந்த திட்டமும், நாட்டிலுள்ள அனைவர்க்கும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம்  Disney+ Hotstar. இலவச பிரீமியம் மெம்பர்ஷிப்பை தருகிறது.

JioFiber ரூ.2499 பிராட்பேண்ட் திட்டம்: 

ரூ.2499 பிராட்பேண்ட் திட்டம் 500 Mbps வேகம் மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியை தருகிறது.   மேலும் இது  Netflix (Standard), Amazon Prime, Disney+ Hotstar, Sony Liv, Jio Cinema, Zee5, VootKids, Sun Nxt, HoiChoi, Universal+, Lionsgate Play, JioCinema, ShemarooMe, Eros Now, Alt Balaji and JioSaavn சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

JioFiber ரூ.3999 பிராட்பேண்ட் திட்டம்: 

 ரூ.3999 பிராட்பேண்ட் திட்டம் வேகம் மற்றும் 30 நாட்கள்  வேலிடிட்டியை தருகிறது.  மேலும் இது  Netflix (Premium), Amazon Prime, Disney+ Hotstar, Sony Liv, Jio Cinema, Zee5, VootKids, Sun Nxt, HoiChoi, Universal+, Lionsgate Play, JioCinema, ShemarooMe, Eros Now, Alt Balaji and JioSaavn சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News