ஹேக்கிங் முறையாக கற்றுக் கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்

ஹேக்கிங் என்பது அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளவும், பிறருக்கு உதவுவதற்கும் இதனை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2022, 07:35 PM IST
  • ஹேக்கிங் கற்றுக் கொள்ள விருப்பமா?
  • எளிமையான வழிமுறைகள் உள்ளன
  • ஆன்லைனில் இருக்கும் புத்தகத்தை படிக்க வேண்டும்
ஹேக்கிங் முறையாக கற்றுக் கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ் title=

ஹேக்கிங் கற்றுக் கொள்ள  நீங்கள் விரும்பினால், அவற்றுக்கு சில அடிப்படையான சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஹேக்கர்ஸின் வகைகளை தெரிந்து கொள்ளுங்கள். 

1.பிளாக்ஹேட் ஹேக்கர்
2.வொயிட்ஹேட் ஹேக்கர்
3.கிரேஹேட் ஹேக்கர்
4. ஸ்கிரிப்ட் கிட்டி ஹேக்கர்ஸ்

பிளாக்ஹேட் ஹேக்கர்ஸ்

இவர்கள் Hacking-ஐ தொழிலாக செய்து பணத்தை சம்பாதிக்க கூடியவர்கள்.அதாவது கார்டிங்,ஸ்பேமிங், ஃபிஷிங் மற்றும் வெப்சைட் ஹேக்கிங் மூலம் பணத்தினை சம்பாதிப்பார்கள். அதாவது தங்களின் Hacking திறமைகளை தவறாக பயன்படுத்துபவர்கள். மிரட்டி பணம் பறிப்பார்கள். 

மேலும் படிக்க | விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பைக்குகள்

வொயிட்ஹேட் ஹேக்கர்ஸ்

இவர்கள் நிறுவனங்களில் வேலை செய்யகூடிய செக்யூரிட்டி என்ஜினியர்கள். இவர்கள் தங்களது hacking திறமைகளை சொந்த Company network-களில் உள்ள தவறுகளை ஹேக் செய்து, அவற்றில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்வார்கள். நல்ல விஷயங்களுக்கு மட்டுமே தங்களின் ஹேக்கிங் திறமையை பயன்படுத்துவார்கள். 

கிரேஹேட் ஹேக்கர்ஸ்

இவர்கள் தங்களது திறமைகளை நல்லது & கெட்டது என இரண்டுக்கும் பயன்படுத்தக்கூடியவர்கள். தங்களது Company-ல் வேலை செய்யும் போது Whitehat ஆகவும். இரவு நேரங்களில் Blackhat ஆகவும் செயல்படுவார்கள்.

ஸ்கிரிப்ட் கிட்டி

மேற்கூறிய 3 வகை Hackers-ம் தாங்கள் சொந்தமாக Tools-ஐ உருவாக்க தெரிந்தவர்கள். ஆனால் இந்த Script kidde-க்கு Tools-ஐ உருவாக்க தெரியாது,அந்த 3வகை Hacker- உருவாக்கிய டூல்ஸ்-ஐ பயன் படுத்தக்கூடியவர்கள்.

ஹேக்கருக்கு என்னென்ன வேண்டும்?

நல்ல கம்ப்யூட்டர் தேவை. அப்போது தான் புரோசஸ் வேகமாக நடக்கும். அதேபோல், ஹேக்கர்ஸூக்கு இன்டர்நெட் கனெக்ஷனும் அவசியம்.DDOS போன்ற Attack-க்கு வேகமான Connection தேவை. C & C++ போன்றவை கற்று கொள்ளவேண்டும். மேலும், அனைத்து வகையான OS-யும் பயன்படுத்த தெரிய வேண்டும். Networking தெரிந்திருக்க வேண்டும். இதனையெல்லாம் முறைப்படி நிபுணர்களிடம் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். மேலும், Hacking சம்மந்தமான நிறைய Books online-ல் கிடைக்கிறது அவற்றை படிப்பதன் மூலம் Hacking திறமை வளரும்.ஈடுபாட்டின் மூலம் தான் கற்றுகொள்ள முடியும்.ஈடுபாடு இல்லையென்றால் கற்று கொள்ளமுடியாது. இவைதவிர dtabase, Scripting, Python, ruby  போன்ற Scripting language –ஐ கற்றுக்கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | இந்தியாவில் ஹூண்டாய் ஐ10 கார்ப்பரேட் எடிஷன் கார் அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News