Flipkart: நிமிடத்தில் பிளிப்கார்ட் யுபிஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?

Flipkart UPI: பிளிப்கார்ட் யுபிஐ மூலம் நீங்கள் ஆன்லைன் தளத்தில் பணப்பரிமாற்றம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 4, 2024, 04:30 PM IST
  • பிளிப்கார்ட் பணப்பரிவர்த்தனை ஆரம்பம்
  • கூகுள் பே, போன் பே செயலிகளுக்கு கடும் போட்டி
  • இனி பிளிப்கார்ட் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்
Flipkart: நிமிடத்தில் பிளிப்கார்ட் யுபிஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? title=

ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து பிளிப்கார்ட் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் நுழைந்துள்ளது. Amazon Pay, Paytm, Google Pay, PhonePe மற்றும் பிற UPI பணபரிவர்த்தனை செயலிகளுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 31 ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments Bank Limited (PPBL) மீது வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது என்னவென்றால், பிப்ரவரி 29 ஆம்தேதிக்குப் பிறகு புதிய டெபாசிட்கள் மற்றும் கடன் உள்ளிட்ட எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் செய்யக்கூடாது என தடை  விதித்தது.

இருப்பினும் பேடிஎம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளுக்கான தடை என்பது மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டித்தது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவையில் இறங்கியுள்ளது.  பிளிப்கார்ட்டின் இந்த நடவடிக்கையானது, Amazon Pay, Paytm, Google Pay, PhonePe போன்ற UPI செயலிகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) Paytm Payments வங்கியின் விதிமுறைகளின்படி இந்த புதிய  சேவையை தொடங்கியிருக்கிறது பிளிப்கார்ட். Flipkart UPI பயனர்கள் Flipkart செயலியில் எளிதாக ஆன்லைனில் பணம் செலுத்தலாம். UPI ஐடி, ஃபோன் எண் அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்தி லோக்கல் விற்பனையாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | வீட்டில் ஏசியை ஆன் செய்யும் முன்பு இந்த விஷயங்களில் கவனம் தேவை!

இங்கே பிளிப்கார்ட் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம். 

- பிளே ஸ்டோர் (ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து (iOS சாதனங்களுக்கு) Flipkart ஆப்ஸின் சமீபத்திய அப்டேட்டை பதிவிறக்கி இன்ஸ்டால்  செய்யவும்.

- ஆப்ஸில் உள்ள 'Flipkart UPI' ஆப்சனைக் கண்டறிந்து, அதை கிளிக் செய்யவும்.

- அதில் கொடுக்கப்பட்ட மெனுவிலிருந்து 'Add Bank Account' ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.

- நீங்கள் Flipkart UPI உடன் இணைக்க விரும்பும் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.

- நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கியை Flipkart UPI உடன் இணைக்கும் வகையில் ஓடிபிகளை கொடுத்து, செயல்முறையை நிறைவு செய்யவும்.

மேலும் படிக்க | சுந்தர் பிச்சை பொறுப்புக்கு ஆப்பு... கூகுளில் இருந்து டிஸ்மிஸ்? - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News