Facebook உள்நுழைவு சான்றுகளை திருடும் 25 செயலிகளை நீக்கும் Googleன் அதிரடி நடவடிக்கை

பயனர்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை சேதப்படுத்தும் என்ற அச்சத்தால் 25 செயலிகளை நீக்கியது கூகுள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2020, 12:44 PM IST
  • 25 செயலிகளை அதிரடியாக நீக்கியது Google
  • அவை Facebook உள்நுழைவு சான்றுகளை திருடின
  • அவை 25 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்திருந்தன
  • அவை பயனர்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை அழித்துவிடலாம் என சைபர் பாதுகாப்பு நிறுவனம் Evina அச்சம்
Facebook உள்நுழைவு சான்றுகளை திருடும் 25 செயலிகளை நீக்கும் Googleன் அதிரடி நடவடிக்கை title=

புதிய டெல்லி: பிரபல Search engine நிறுவனமான கூகுள், தனது பயனர்களின் பேஸ்புக் உள்நுழைவு சான்றுகளில் ஃபிஷிங் செய்த 25 appகளைத் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

புதிய malwareகள் பேஸ்புக் உள்நுழைவுகளைத் திருடி, உங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை மோசமாக அழித்துவிடலாம் என்று பிரெஞ்சு சைபர்-பாதுகாப்பு நிறுவனம் Evina அச்சம் தெரிவிக்கிறது.  

"மோசடி செய்வதற்கான புதிய வழிகள் எங்கள் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு வரப்படுகின்றன.   பேஸ்புக் உள்நுழைவுகளைத் திருடும் புதிய தீம்பொருளை நாங்கள் சமீபத்தில் கண்டுபிடித்தோம். இந்த தீம்பொருள்(malware ) உங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை சேதப்படுத்திவிடலாம். அதனால், உங்களுடைய மிகவும் மதிப்புமிக்க டிஜிட்டல் பயன்பாட்டை பாதுகாக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.  malwareகள் பிரபலமான செயலிகள் பலவற்றில் embed செய்யப்பட்டுள்ளது,” என்றி சைபர் பாதுகாப்பு நிறுவனம் எவினா ஒரு வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டிருக்கிறது.

Read Also | Zoom, Google Meet-க்கு போட்டியாக களமிறங்கும் 'JioMeet'.... சிறப்பு அம்சம் என்ன?

அந்த செயலிகளின் பட்டியல்:
Super Wallpapers Flashlight        
Padenatef
Wallpaper Level               
Contour level wallpaper
iPlayer & iWallpaper      
Video Maker     
Color Wallpapers             
Pedometer        
Powerful Flashlight         
Super Bright Flashlight  
Super Flashlight
Solitaire Game 
Accurate scanning of Meade      
Classic card game            
Junk file cleaning             
Synthetic Z         
File Manager     
Composite Z      
Screenshot Capture       
Daily Horoscope Wallpapers
Wuxia Reader
Plus Weather
Anime Live Wallpaper
iHealth Step Counter
com.tgyapp.fiction
கூகுள் அந்த செயலிகளை நிறுத்திவிட்டது. Evina  அந்த தீம்பொருளை (malware) வெற்றிகரமாக மாற்றியமைத்து (reverse-engineer) விட்டது.  இதனால், இறுதி பயனர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது” என்று இணைய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயலிகள் அனைத்தும் மொத்தமாக 25 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் செய்திருந்ததாக எவினா கூறுகிறது.

Also Read | TikTok என்ற பெயரில் நடக்கும்... இந்த மோசடி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!!

உங்கள் மொபைலில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, malware செயலியின் பெயரை கேட்கிறது, அது பேஸ்புக் செயலியாக இருந்தால், malware ஒரே நேரத்தில் பேஸ்புக்கிற்கான browserஐயும் தொடங்கிவிடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

“browser உங்கள் செயலியை மட்டுமே தொடங்கிவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் உள்ளிடும் தகவல்களை மீட்டெடுப்பதற்காக , ஜாவா ஸ்கிரிப்டை அந்த malware இயக்குகிறது. அது, உங்கள் கணக்கு தொடர்பான தகவல்களை ஒரு சேவையகத்திற்கு அனுப்பும், இதனால் பயனர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்” என்று எவினா சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

Trending News