iPhone 13-ல் ரூ. 34,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் சேலில் அதிரடி சலுகை, முந்துங்கள்!!

Flipkart Big Bachat Dhamaal Sale: மிகக்குறைந்த விலையில், எக்கச்சக்க தள்ளுபடியுடன் ஐபோன் வாங்க வேண்டுமா? பிளிப்கார்டில் வந்துள்ளது அருமையான வாய்ப்பு. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 26, 2022, 02:35 PM IST
  • ஃபிளிப்கார்ட்சில் இன்று முதல் பிக் பச்சத் தமால் விற்பனை தொடங்கியுள்ளது.
  • இந்த விற்பனை ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
iPhone 13-ல் ரூ. 34,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் சேலில் அதிரடி சலுகை, முந்துங்கள்!! title=

ஃபிளிப்கார்ட் பிக் பசத் தமால் சேல்: ஃபிளிப்கார்ட்சில் இன்று முதல் பிக் பச்சத் தமால் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஐபோன் ரசிகராக இருந்து, புதிய ஐபோன் 13 ஐ வாங்க திட்டமிட்டிருந்து, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இன்று உங்களுக்கு ஒரு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபோன் 13-ல் ரூ.34 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில், ஐபோன்13 இல் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ஃபிளிப்கார்ட் பிக் பசத் தமால் விற்பனை: ஐபோன் 13 இல் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ஐபோன் 13-இன் (128 ஜிபி) வெளியீட்டு விலை ரூ.79,900 ஆகும். எனினும், பொளிப்கார்டில் இந்த போன் ரூ.65,999-க்கு கிடைக்கிறது. அதாவது, போனில் ரூ.13,901 முழுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இது தொலைபேசியின் விலையை மேலும் குறைக்கும்.

மேலும் படிக்க | ரூ.16,999 விலை கொண்ட நோக்கியா G21 ஸ்மார்ட்போனை ரூ.800-க்கும் குறைவான விலையில் வாங்கலாம்

ஃபிளிப்கார்ட் பிக் பசத் தமால் விற்பனை: ஐபோன் 13 இல் கிடைக்கும் வங்கி சலுகைகள்

ஐபோன் 13 ஐ வாங்க எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.64,999 ஆக குறையும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும், அதாவது ஒரு பரிமாற்ற சலுகையும் உள்ளது. இது இந்த ஸ்மார்ட்போனின் விலையை கணிசமாகக் குறைக்கும்.

ஃபிளிப்கார்ட் பிக் பசத் தமால் விற்பனை: ஐபோன் 13 இல் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை

பிளிப்கார்ட் சலுகையில் ஐபோன் 13 இல் 19 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொண்டால், இந்த தள்ளுபடி கிடைக்கும். எனினும், இந்த தள்ளுபடியை பெற, வாடிக்கையாளர்கள், தங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருப்பதையும், லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் பரிமாற்ற சலுகையாக 19 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | ரூ.15,000-க்குள் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News