WhatsApp-ன் இந்திய தலைவர் ஆகின்றார் அபிஜித் போஸ்!

சமூக ஊடக ஜாம்பவான் பேஸ்புக் நிறுவனத்தின் பகுதி செயலியான வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார!

Last Updated : Nov 23, 2018, 01:53 PM IST
WhatsApp-ன் இந்திய தலைவர் ஆகின்றார் அபிஜித் போஸ்! title=

சமூக ஊடக ஜாம்பவான் பேஸ்புக் நிறுவனத்தின் பகுதி செயலியான வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார!

சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை தக்கவைத்துள்ள வாட்ஸ் அப், உலகம் முழுவதும் 130 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை அந்நிறுவனம் நியமித்துள்ளது. 

ஹர்ட்வெர்ட் தொழில் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்தவருடத் தொடக்கத்தில் இவர் பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அபிஜித் தெரிவிக்கையில்... இந்தியர்களில் வாழ்வில் ஒரு அங்கமாய் மாறியுள்ள வாட்ஸ் அப் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களில் வர்தக தூதுவராகவும் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களின் தொழில் வளர்ச்சிக்கு வாட்ஸ் ஆப்பினை எப்படி பயன்படுத்துவ என்பது குறித்தே தனது பணி இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பணபறிமாற்று செயலியான வாட்ஸ் அப் பே-விற்கென இந்தியாவில் அலுவலகம் அமைக்க வேண்டுமெம் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டதற்கு பின்னர் அபிஜித் போஸின் நியமணம் குறித்த அறிவிப்பினை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News