பிரதமர் நரேந்திர மோடி-யின் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் தற்போது இணைந்துள்ளது!
நாடு முழுவதும் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்பட்டு, அந்த நகரங்களில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
ஆட்சி அமைத்த பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதும் 90 நகரங்கள் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மூன்று கட்டங்களாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நான்காவது கட்டமாக 9 நகரங்களைத் தேர்வுசெய்து, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நான்காவது பட்டியலில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் இடம்பெற்றுள்ளது!
ஸ்மார்ட் நகர நிகழ்ச்சியில் புதிய நகரங்களின் பட்டியல் இங்கே:
1. சில்வாஸா (தத்ரா மற்றும் நகர் ஹவேலி)
2. ஈரோடு (தமிழ்நாடு)
3. டீயு (டையு & டாமன்)
4. பீகார் ஷரீஃப் (பீகார்)
5. பரேலி (உத்தர பிரதேசம்)
6. இட்டாநகர் (அருணாச்சல பிரதேசம்)
7. மொராதாபாத் (உத்தர பிரதேசம்)
8. சஹரன்பூர் (உத்திரப் பிரதேசம்)
9. கவரத்தி (லக்ஷ்வீப்)