சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து வரும் திங்கள்கிழமை வரை தனது லண்டன் அலுவலகத்தை அடைப்பதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் தெரிவிக்கையில்., "எங்கள் சிங்கப்பூர் அலுவலகத்தில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஊழியர் 2020 பிப்ரவரி 24-26 இடைப்பட்ட காலத்தில் எங்கள் லண்டன் அலுவலகங்களுக்கு விஜயம் செய்தார், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் அடைக்கப்படுகிறது.
ஆழ்ந்த துப்புரவுக்காக திங்கள்கிழமை வரை லண்டன் அலுவலகம் அடைக்கப்படுகிறது., அதுவரை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள்" என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக பேஸ்புக் தனது சிங்கப்பூர் அலுவலகத்தின் பாதிக்கப்பட்ட பகுதியை மையமாகக் கொண்ட ஊழியர்களுக்கு மார்ச் 13-வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதேப்போன்று சியாட்டிலில் ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் பேஸ்புக் நிறுவனம் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட இந்த ஊழியர் பிப்ரவரி 21 அன்று சியாட்டிலிலுள்ள பேஸ்புக்கின் ஸ்டேடியம் கிழக்கு அலுவலகத்தில் கடைசியாக இருந்த்தாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நிறுவனம் புதன்கிழமை இரவு ஊழியர்களை எச்சரித்து, மார்ச் 9 வரை அனைத்து ஊழியர்களு வீட்டில் இருந்து வேலை செய்ய கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கொரோனா அச்சம் காரணமாக ட்விட்டர் (twitter) தனது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது.
அதாவது, உலகளவில் தனது 5,000 பேர் கொண்ட சக்திவாய்ந்த பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்த ட்விட்டர்., ஹாங்காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா அலுவலகங்களை தளமாகக் கொண்ட ஊழியர்களுக்கு இந்த முறைமையை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேலையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ட்விட்டர் தளம், நேரில் வர வேண்டிய அவசியத்தை உணரும் ஊழியர்களுக்காக அமெரிக்க அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.