ஆட்டோமேட்டிக் கார் வாங்க பிளாங்கா? ஒரு நிமிஷம் இந்த செய்தியை படியுங்க

Top 5 most affordable automatic cars in India: இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கார்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய கார் வாங்குபவர்களும் கியர் இல்லாத கார்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 6, 2023, 03:25 PM IST
  • மலிவான ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்.
  • புதிய கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.
ஆட்டோமேட்டிக் கார் வாங்க பிளாங்கா? ஒரு நிமிஷம் இந்த செய்தியை படியுங்க title=

Top 5 most affordable automatic cars in India: இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கார்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய கார் வாங்குபவர்களும் கியர் இல்லாத கார்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். பொதுவாக கியர் கொண்ட கார்களை விட ஆட்டோமேட்டிக் விலை அதிகமே, அந்த வகையில் இன்று நாங்கள் உங்களுக்காக டாப் ஐந்து ஆட்டோமேட்டிக் கார்களை கொண்டு வந்துள்ளோம், இவை ரூ.7 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

Maruti Suzuki Alto K10: மாருதி சுஸுகி ஆல்டோ கே10, நாட்டின் விலை குறைந்த ஆட்டோமேட்டிக் கார் ஆகும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.84 லட்சம் ஆகும். மேலும் இந்த கார் VXi AT வேரியண்ட் ஆகும். அதேசமயம், VXi Plus AT வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.88 லட்சம் ஆகும். இந்த ஹேட்ச்பேக் காரில் 998சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் லிட்டருக்கு 24.9 கிமீ மைலேஜ் தரும். இது 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே டசஸ்கிரீன் போன்ற அம்சங்களையும் பெறுகிறது.

மேலும் படிக்க | ஹீரோ நிறுவனத்தின் சிறந்த சலுகை! வெறும் 5000 ரூபாயில் புதிய Hero HF டீலக் பைக்கை பெறுங்கள்!

Maruti Suzuki S-Presso: நாட்டின் இரண்டாவது மலிவான ஆட்டோமேட்டிக் கார் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் உள்ளது. மாருதி எஸ்-பிரஸ்ஸோவின் பேசிக் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.74 லட்சமாகவும், டாப் ஸ்பெக் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.04 லட்சமாகும். இது 998சிசி பெட்ரோல் எஞ்சின் ஆதரவையும் பெறுகிறது. இந்த ஹேட்ச்பேக் கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 21.7 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும்.

Renault Kwid: ரெனால்ட் க்விட் ஒரு சிறந்த ஆட்டோமேட்டிக் கார் ஆகும். இந்த காரின் பேஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை ரூ.5.61 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் பிரெஞ்சு ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்கிறது. அதேசமயம், டாப் ஸ்பெக் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.83 லட்சம் ஆகும். இதில் 999சிசி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மைலேஜ் அடிப்படையில், இந்த கார் மிகவும் சிறப்பாக உள்ளது, மேலும் 22 kmpl மைலேஜ் இந்த கார் தருகிறது.

Maruti Suzuki Celerio: மலிவு விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியலில் மாருதி மீண்டும் நுழைந்துள்ளது. மாருதி செலிரியோ ஒரு வலிமையான ஆட்டோமேட்டிக் கார் ஆகும், VXI AMT வகையின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.37 லட்சம் ஆகும். இதன் இரண்டாவது ஆட்டோமேட்டிக் வகை ZXI AMT ரூ.6.65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது. இந்த கார் 26 kmpl மைலேஜுடன் 998cc பெட்ரோல் எஞ்சின் ஆதரவைப் பெறுகிறது.

Tata Tiago: பட்டியலில் ஐந்தாவது இடத்தில் டாடா டியாகோ உள்ளது, இதன் ஆட்டோமேட்டிக் மாறுபாட்டிற்கான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.75 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. நாட்டின் முதல் 5 மலிவான ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியலில் இந்த கார் மிகவும் சக்தி வாய்ந்தது. இது 1199சிசி சக்தி வாய்ந்த பெட்ரோல் எஞ்சின் ஆற்றலைப் பெறுகிறது.

மேலும் படிக்க | 107 ரூபாய்க்கு 60 நாட்களுக்கு வேலிடிட்டி, டேட்டா, இலவச அழைப்பு என அசத்தும் BSNL

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News