மத்திய பட்ஜெட்: தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய அம்சங்கள்!

பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 04:32 PM IST
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2022ஐ தாக்கல் செய்துள்ளார்.
  • 75 டிஜிட்டல் வங்கிகளின் மூலம் இந்தியாவின் 75 மாவட்டங்களில் வணிக வங்கிகள் நிறுவப்படும்.
மத்திய பட்ஜெட்: தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய அம்சங்கள்! title=

2022ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் (central Budget) தாக்கலில் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து முக்கியமான அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

ALSO READ | Highlights of Budget 2022: பட்ஜெட்டின் முக்கியமான 40 ஹைலைட் அம்சங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2022ஐ தாக்கல் செய்துள்ளார். அதில் நாட்டில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும், இந்த வளர்ச்சி விகிதமானது மற்ற பொருளாதார வளங்களை ஒப்பிடுகையில் சற்றே அதிகமானதாகும்.  

இந்த பட்ஜெட் தாக்கலில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து ஆர்பிஜி என்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா ட்வீட் செய்துள்ளார்.  அதில், 'இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது capex, டிஜிட்டல் போன்றவற்றின் நலனை பேணுவதாக உள்ளது.  இதன் மூலம் என்னால் தெளிவாக எதிர்காலத்தின் வளர்ச்சியை காண முடிகிறது' என்று பதிவிட்டுள்ளார்.  

இந்த பட்ஜெட் தாக்கலின் முக்கிய அம்சங்கள்:

1) PM e-vidyaவின் ஒரு வகுப்பு - ஒரு சேனல் 12 முதல் 12,000 டிவி சேனல்களாக விரிவு செய்யப்படுவதன் மூலம் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும்.

 2) டிஜிட்டல் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் network hub மற்றும் spoke model மூலம் பல இந்திய மொழிகளில் கற்றல்-கற்பித்தல் நடைபெறும்.

3) 75 டிஜிட்டல் வங்கிகளின் மூலம் இந்தியாவின் 75 மாவட்டங்களில் வணிக வங்கிகள் நிறுவப்படும்.

4) E- பாஸ்போர்ட்களில் சிறந்த தொழில்நுட்பத்துடன் சிப்கள் பதிக்கப்பட்டு வழங்கப்படும்.

5) AVGC (Animation, Visual effect, Gaming, comics) மூலம் உலகளாவிய சந்தையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

6) ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் 2023ம் ஆண்டில் மொபைல்களுக்கு 5G சேவை வழங்கப்படும்.

7) கிராமப்புற பகுதிகளில் குறைந்த விலையில் பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும்.  இது PLI திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

8) விவசாயங்களை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு கிசான் ட்ரோன்கள் வழங்கப்படும்.

9) பணம் செலுத்துவதில் உருவாகும் சிக்கல்களை குறைக்கும் வகையில் இன்னும் 10 நாட்களில் அமைச்சகங்களால் அமைக்கப்படும் டிஜிட்டல் இ-பில்கள் மூலம் இந்த சிக்கல் தீர்க்கப்படும்.

10) கிராமப்புற பகுதிகளில் 2025க்குள் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் முழுவதுமாக அமைக்கப்படும்.

11) பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் நாணயங்கள் FY 22-23 முதல் RBI மூலம் வெளியிடப்படும். இந்த மத்திய டிஜிட்டல் நாணயமானது சிறந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உருவாக்கும்.

12) Battery Swapping கொள்கை சிறந்த நிலை உருவாக்கப்படும், தனியார் துறைகளை ஊக்குவிப்பதன் மூலம் EV sector செயல்திறன் மேம்படுத்தப்படும்.

13) கூடுதலாக ரூ.19,500 கோடி ஒதுக்குவதன் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் PLI 280 ஜிகாவாட் சூரிய சக்தியை அடையும் வகையில் 2030க்குள் அதிக திறன் கொண்ட சோலார் மாட்யூல்கள் உற்பத்தி செய்யப்படும்.

14) எவ்வித டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாயில் 30% வரி விதிக்கப்படும்.

ALSO READ | Budget 2022 Reaction: ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவுத் திட்டம்!? அவசியம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News