Cheapest Smartphones: ரூ. 10,000-க்கும் கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்

நீங்கள் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான சில சிறந்த தேர்வுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 04:55 PM IST
  • உங்கள் பட்ஜெட்டில் பொருந்தும் வகையில் சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
  • இன்பினிக்ஸ் தொலைபேசிகள் குறைந்த விலை மற்றும் அற்புதமான அம்சங்கள் காரணமாக மிகவும் விரும்பப்படுகின்றன.
  • பட்ஜெட் ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, ரியல்மி ஒரு சிறந்த வரம்பை வழங்குகிறது.
Cheapest Smartphones: ரூ. 10,000-க்கும் கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் title=

Smartphone under Rs. 10000: நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மிக முக்கியமான கேஜெட்டாக மாறிவிட்டது. இது தொழில்முறை வாழ்க்கையிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

நீங்கள் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான சில சிறந்த தேர்வுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். உங்கள் பட்ஜெட்டில் பொருந்தும் வகையில் சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் அற்புதமான கேமரா அமைப்பு, வலுவான பேட்டரி மற்றும் சமீபத்திய அம்சங்கள் ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

Realme C25s

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, ரியல்மி (Realme) ஒரு சிறந்த வரம்பை வழங்குகிறது. ரியல்மியின் C25s ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 85 ப்ராசசர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. கேமராக்களைப் பற்றி பேசுகையில், பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .9,999 ஆகும்.

Tecno Spark 7 Pro

ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான டெக்னோ (Tecno Spark) தொடர்ந்து மலிவான மற்றும் நல்ல தொலைபேசிகளை அறிமுகப்படுத்துகிறது. Tecno Spark 7 Pro ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .9,999 ஆகும்.

ALSO READ: Amazon-ல் சாம்சங் போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடிகள்: முந்துங்கள் 

Infinix Hot 10S

இன்பினிக்ஸ் தொலைபேசிகள் குறைந்த விலை மற்றும் அற்புதமான அம்சங்கள் காரணமாக மிகவும் விரும்பப்படுகின்றன. Infinix Hot 10S போன் 6.82 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 செயலி கொண்டது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்களின்  பின்புற அமைப்பு மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .9,999 ஆகும்.

Poco C3

உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த போகோ (Poco) ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். Poco C3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், மீடியாடெக் ஹீலியோ ஜி 35 செயலி ஆகியவை உள்ளன. இதில் 13 எம்பி முதன்மை சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டிப்த் சென்சார் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 5 எம்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .7,999 ஆகும்.

ALSO READ: Flipkart Deals! இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பு தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News