Budget 2024 Expectations:மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், நாளை, ஜூலை 23ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம். நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் பட்ஜெட்டில் மொபைல் போன்கள் மீதான் வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனால் மொபைல் போன்களின் விலை குறையும். ஸ்மார்ட் போன் பயனாளர்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், போனின் விலை குறையும் வகையில் ஏதாவது அறிவிப்பை வெளியிடுவாரா என ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஸ்மார்போன் என்பது ஆடம்பர பொருளாக இருந்த காலம் போய், இப்போது அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, போன்கள் விலை குறைந்தால், நடுத்தர, எளிய மக்கள் பலர் பலனடைவார்கள்.
இந்தியாவில் நிறுவனங்கள் குறைந்த விலையில் போன்களை தயாரிக்க உதவும் வகையில், கடந்த ஆண்டு, இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்க, கேமரா லென்ஸ்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்தது. தொலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் மீதான வரியும் குறைக்கப்பட்டது .
மேலும் படிக்க | Budget 2024... ஹைபிரிட் கார்கள் விலை அதிரடியாய் குறைய வாய்ப்பு...!
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள NDA அரசாங்கம் அதன் முதன்மைத் திட்டமான உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான PLI (Priduction Linked Incentive) திட்டத்தை வரவிருக்கும் பட்ஜெட்டில் மீண்டும் செயல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் விற்கப்படும் பொருட்களிலும் இந்தியப் பொருட்கள் சிறந்ததாகக் கருதப்பட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
உள்நாட்டிலேயே பொருட்களைத் தயாரிக்க ஊக்குவிக்கும் இந்த PLI திட்டத்தின் கீழ், இந்தியாவில் அதிக அளவில் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, அதிக பலன்கள் கிடைக்கும். இந்தத் திட்டம் பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்ப்பதோடு, புதிய முதலீடுகளையும் ஈர்க்கும்.
PLI திட்டத்தின் கீழ், தொழில்கள் பெருகி உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களின் அளவும் அதிகரிக்கிறது. எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் போன்ற 14 அத்தியாவசிய துறைகளுக்கான PLI திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போது மேலும், பல துறைகளில் இந்த திட்டத்தை விரிவு படுத்த, மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எகட்ரானிக்ஸ் துறையை போல ஆட்டோமொபைல் துறையும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் முழுமையான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க தளங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ