இந்தியாவே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டு வருவதால், டெலிகாம் துறை சார்ந்த நிறுவனங்கள் மெல்ல மெல்ல புதிய உச்சாணிக் கொம்பை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயன்று கொண்டிருக்கும் நிலையில், இந்த ரேஸில் பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிந்தளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை பெறுவதில் ஜியோ முன்னணியில் இருந்தாலும், அந்த நிறுவனத்துக்கு ஈடான பிளான்களை பிஎஸ்என்எல் நிறுவனமும் வழங்கி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், BSNL மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட குறைந்த விலையில் கூடுதல் டேட்டா வழங்குவதில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில், 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் தினமும் 5ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல்-ன் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அடிக்கடி கார் வாஷிங் செய்கிறீர்களா? அப்போ இந்த செலவு நிச்சயம் செய்ய வேண்டியிருக்கும்
BSNL இன் ரூ.599 திட்டம்:
இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 5 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த திட்டத்தில் லிமிட் இல்லாத இலவச டேட்டாவும் வழங்கப்படுவது சிறப்பு. இது தவிர, நீங்கள் இலவச CallerTune மற்றும் Zing ஆப் சந்தாவைப் பெறுவீர்கள்.
Vi இன் ரூ 599 திட்டம்:
Vi மற்றும் Reliance Jio, இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ 599 திட்டத்தை வழங்குகின்றன. Vi இன் ரூ 599 ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவை வழங்குகிறது. இது லிமிட் இல்லாத வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்தத் திட்டம், டேட்டா டிலைட்ஸ், வீக்கெண்ட் ரோல்ஓவர் மற்றும் பிங்கே ஆல் நைட் ஆஃபர் உள்ளிட்ட Vi Hero அன்லிமிடெட் நன்மைகளையும் வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.599 திட்டம்:
ஏர்டெல்லின் ரூ.599 திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இந்த பேக் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் பிற நெட்வொர்க் குரல் அழைப்பு நிமிடங்கள் வரம்பற்றவை. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் 1 வருடத்திற்கு Disney + Hotstar VIP இன் இலவச சந்தாவைப் பெறுகிறார்கள். விங்க் மியூசிக் சந்தாவும் இலவசம். இது தவிர, ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் HelloTunes, Shaw Academyயின் 1 ஆண்டு இலவச ஆன்லைன் படிப்பு மற்றும் Fastag இல் ரூ.100 கேஷ்பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ