iPhone 13 மற்றும் SE 3 ஐபோன்களின் உற்பத்தியை Apple குறைப்பதன் பின்னணி

ஐபோன்கள் மற்றும் ஏர்போட்களின் உற்பத்தியை கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது ஆப்பிள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 28, 2022, 09:05 PM IST
  • ஐபோன்களின் உற்பத்தியை குறைக்கும் Apple
  • தொழில்நுட்பத் துறையில் வரவிருக்கும் நெருக்கடி
  • பணவீக்கம், ரஷ்யாவின் போர், சிப் பற்றாக்குறையால் சிக்கல்
iPhone 13 மற்றும் SE 3 ஐபோன்களின் உற்பத்தியை Apple குறைப்பதன் பின்னணி title=

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் நிலவும் மோதல் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் தனது உற்பத்தியைக் குறைக்கிறது.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், ஐபோன்கள் மற்றும் ஏர்போட்களின் உற்பத்தியை கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது, இது குறையும் தேவைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக Nikkei தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பில் தெரிந்தவர்களை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மற்றும் ஐபோன் எஸ்இ 2022 உற்பத்தியை 20 சதவீதம் குறைக்கும். உக்ரைன் நெருக்கடி ஒரு மெகா தொழில்நுட்ப நிறுவனத்தை பாதிக்கும் முதல் அறிகுறி என்று அறிக்கை கூறுகிறது. அதிகரித்து வரும் பணவீக்க நெருக்கடியும் பலவீனமான தேவையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஐபோன் எஸ்இ, 2022 இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, தொழில்நுட்ப நிறுவனமானது அதன் உற்பத்தி வரிசையை சுமார் 2 மில்லியனாகக் குறைத்து, முழு காலாண்டில் மொத்தம் 3 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.   

மேலும் படிக்க | iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி

AirPods உற்பத்தியும் ஆண்டிற்கு 10 மில்லியன் யூனிட்களாக குறைக்கப்படும் என்று Nikkei அறிக்கை கூறுகிறது. குறைந்த தேவையை சமநிலைப்படுத்தவும், தற்போதுள்ள சரக்குகளை அகற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 13 சீரிஸ் விநியோகத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது.  சமீபத்திய ஐபோன் 13 தொடரின் இரண்டு மில்லியன் யூனிட்களின் உற்பத்தியைக் குறைக்க ஆப்பிள் முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையை, பருவகால தேவை காரணமாக உற்பத்தியை சீர்செய்தல் என நிறுவனம் கூறுகிறது.

தற்போது நிலவும் சிப் பற்றாக்குறையும் நிலைமையை மோசமாக்குகிறது. பணவீக்கம், ரஷ்யாவின் உக்ரேன் மீதான போர் மற்றும் சிப் பற்றாக்குறை ஆகிய மூன்று காரணிகளும் தொழில்நுட்பத் துறையில் வரவிருக்கும் நெருக்கடியைக் குறிக்கலாம், ஆனால் இந்த நெருக்கடியானது, கணினி சந்தை மற்றும் ஆட்டோமொபைல் சந்தை ஆகியவற்றையும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சரிவடையச் செய்யலாம்.

ஆப்பிளின் புதிய iPhone SE 3 என்பது தொழில்நுட்ப நிறுவனமான முதல் பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன் ஆகும். ஆப்பிளின் A15, பயோனிக் தொலைபேசியை இயக்குகிறது.
இது ஐபோன் 13 தொடரிலும் காணப்படுகிறது. ஆப்பிள் புதிய SE 3, முதல் முறையாக ஐபோன் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | Apple: ஆப்பிள் புதிய ஐபோன் சந்தா சேவையை அறிமுகப்படுத்துகிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News