நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 20 ஆம் தேதி தேர்தல் அலுவலர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 180-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முகவர்கள் அமரும் அறையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடும் டிவி திரையில் பதிவுகள் எதுவும் தெரியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஜெயக்குமார் பேச்சு!
இது குறித்து தேர்தல் அலுவலர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருண செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்றைய தினம் நீலகிரி தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 20 நிமிடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து விட்டன. இது சம்பந்தமாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது. கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு எந்திரங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் கல்லூரியை சுற்றி 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதனை அரசியல் கட்சி முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியை பொருத்தவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு போலீசார் மற்றும் நீலகிரி போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை, ஏனென்றால் முதலாவதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை மீறி வாக்கு எந்திரங்கள் உள்ள அறைக்குள் யாரும் செல்ல முடியாது. மேலும் அரசியல் கட்சியினர் சார்பிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை. இது மட்டும் இன்றி தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் யார் வேண்டுமானாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடலாம் என்றார்.
அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்கள் 173 கண்காணிப்பு கேமராக்களும் பணியாற்றவில்லை. அந்த குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை. உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கூலர்ஸ் வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இன்று 4 மணிக்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட வருகின்றனர். எனவே பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை.
மேலும் எதிர்காலத்தில் இதுபோல் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ள தனியாருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை என்ற அருணா எதிர்காலத்தில் இதுபோல் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தனியாருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ