மேட்டூர் அணையின் நீர்வரத்து கனிசமாக குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,501 கனஅடியாக குறைந்துள்ளது!

Last Updated : Jul 31, 2018, 01:01 PM IST
மேட்டூர் அணையின் நீர்வரத்து கனிசமாக குறைவு! title=

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,501 கனஅடியாக குறைந்துள்ளது!

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிக்கும், மேட்டூர் அணைக்கும் வரும் நீரின் அளவு கனிசமாக குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதேவேலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கிருஷ்ண ராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டின. தற்போது, மழை குறைந்துவிட்ட காரணத்தால் தமிழகத்திற்கு திறக்கப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின்அளவு வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி-யில் இருந்து 20,000 கனஅடியாக குறைந்துள்ளது. இதற்கிடையில் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தொடர்ந்து 23-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 23,501 கனஅடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 26,071 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Trending News