அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன்.. காவலரை மிரட்டும் ஆய்வாளர் வைரல் ஆடியோ

பொங்கி எழுந்த ஆய்வாளர் ரஞ்சித் "அடிச்சி பல்லெல்லாம் கழட்டிருவேன்" நாயே முட்டாப்பயலே" ரிமாண்ட் பன்னிருவேன் ஜாக்கிரதை, என்கிட்டே சட்டம் பேசற நீ" -வைரல் ஆடியோ

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 16, 2022, 01:21 PM IST
அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன்.. காவலரை மிரட்டும் ஆய்வாளர் வைரல் ஆடியோ title=

ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் பெண் காவலர் முருகவள்ளி. இவருடைய கணவர் கனகராஜ் திருநெல்வேலி மாவட்ட சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஆண்டு இவருடைய மனைவி முருகவள்ளி ராமநாதபுரத்தை அடுத்த உத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சமயத்தில் அவருடன் அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் தமிழ்செல்வன் என்பவர் பெண் காவலர் முருகவல்லியின் செல்போனில் அனுப்பிய  குறுந்தகவல்களை பார்த்த கணவர் தன் மனைவியிடம் கேட்டுள்ளார். 

இதுபோல தனக்கு தொடர்ந்து அனுப்பி பாலியல் தொல்லை தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து அந்த ஏட்டு மீது புகார் அளிக்க மனைவி சம்மதிக்காததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து, இது உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதையடுத்து ஏட்டு தமிழ்செல்வன் தண்டிக்கப்படாத நிலையில், பெண் காவலர் முருகவள்ளி மட்டும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் தற்போது பணி செய்து வருகிறார்.

 

ஆனால் அங்கேயும் அதே காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கும் தர்மா என்பவரும் தன் மனைவியுடன் செல்போனில் தொடர்பில் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு முற்றி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து தன் மனைவி தன்னை தாக்க வந்ததாக அவர் வேலை பார்க்கும் அதே பஜார்  காவல் நிலையத்தில் மனைவி முருக வள்ளி மீது கனகராஜ் புகார் அளித்துள்ளார். அதேபோன்று தன் கணவர் தன்னை தாக்கிய தாக அந்த காவல் நிலையத்தில் முருகவல்லி கனகராஜ் மீது புகார் அளித்துள்ளார். இதில் முருகவல்லி அளித்த புகாருக்கு மனு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கனகராஜ் கொடுத்த புகார் மனு ரசீது கொடுக்கப்படாததால், புகார் கொடுத்ததற்கான மனு ரசீது கேட்டு காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய காவலர் கனராஜிடம், மனு ரசீது  எல்லாம் கொடுக்க வேண்டும் என சட்டத்தில் சொல்லவில்லை எனக் கூறிய ஆய்வாளர் ரஞ்சித்தை, இடைமறித்த காவலர் கனகராஜ், "நான்படித்த சட்டத்தில் யாரும் புகார் கொடுத்தால் அவர்களுக்கு மனு ரசீது கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளதே என எடுத்துக்கூற, அதற்கு கோவப்பட்ட இன்ஸ்பெக்டர் நான் அந்தளவுக்கு படிக்கல என்று எனக் கூறியுள்ளார். அதற்கு காவலர் கனகராஜ் படிக்காமல் எப்படி ஆய்வாளராக ஆனீங்க என்று ரஞ்சித்தை திருப்பிக்கேட்டவுடன், 

பொங்கி எழுந்த ஆய்வாளர் ரஞ்சித் "அடிச்சி பல்லெல்லாம் கழட்டிருவேன்" நாயே முட்டாப்பயலே" ரிமாண்ட் பன்னிருவேன் ஜாக்கிரதை, என்கிட்டே சட்டம் பேசற நீ" என கொடுத்த புகாருக்கு மனு ரசீது கேட்ட ஒரு  சக காவலரிடமே  அநாகரீகமாகவும், அவ மரியாதையாகவும் பேசும் ஆடியோ வெளியாகி ராமநாதபுரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், காவல் நிலையத்தில் புகார் அளித்த சக காவலருக்கே இந்த கதி என்றால் பொதுமக்களுக்கு காவல் நிலையத்தில் எப்படி நியாயம் கிடைக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News