வேலூர் மாவட்டத்தை சேரந்த சிவமூர்த்தி, வேலைக்கு சென்றுவிட்டு திரும்புகையில் தவறுதலாக அருகிலிருந்த பள்ளத்திற்குள் விழுந்துள்ளார். அப்போது அவரது வண்டியிலிருந்த கம்பி ஒன்று அவரது முகத்தில் குத்தியுள்ளது. இதையடுத்து அவர் விழுந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாதையில் விபத்து:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் எனும் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 36) . இவர் நேற்று ஒடுகத்தூர் பகுதியில் இருந்து அரிசி மூட்டை எடுத்துக்கொண்டு மலைப்பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மலை கிராமத்திக்கு செல்லும் வழி, கரடுமுரடான சாலை என்பதால் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அவர், சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்துள்ளார். விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் இருந்த இரும்பு கம்பிகள் சிவமூர்த்தியின் வாயில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த சிவமூர்த்தி மயக்க நிலையில்
இரத்தம் சொட்ட சொட்ட ஒரே இடத்தில் கிடந்துள்ளார்..
விபத்துக்குள்ளான சிவமூர்த்தி இரவு முழுவதும் ஒரே இடத்தில் விடிய விடிய மலைப்பகுதியில் விழுந்து கிடந்துள்ளார். காலை வரை சிவமூர்த்தி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் கூறி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மலைப்பாதை அருகே காயமடைந்து கிடந்த சிவமூர்த்தியை மீட்டனர். அவரது உறவினர்கள் வாயில் இருக்கும் இரும்பு கம்பியை எடுக்க முடியாமல் இரும்பு வெட்டும் இயந்திரத்தை கொண்டு கம்பியை இரண்டாக உடைத்தனர். பின்பு அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிவமூர்த்திக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை..
படுகாயமடைந்துள்ள சிவமூர்த்தியை, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிக்கை அளித்து வருகின்றனர். எனவே ஒடுகத்தூரில் இருந்து கத்தியப்பட்டு மலைப்பகுதிக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மலைவாழ் மக்கள் கோரிக்கை..
மலைப்பகுதியில் சாலை இல்லாமல் இது போல் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகவே உள்ளதால் இதனை அரசு தனி கவனம் செலுத்தி சாலைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் விபத்து ஏற்பட்ட பகுதியை சேர்ந்த மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ