தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது

வட மாநில வாலிபர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 11 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2022, 07:47 AM IST
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது title=

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள முத்தம்பட்டி இரயில்வே கேட் அருகில் வசித்து வருபவர் சண்முகம் இவரது மனைவி சாந்தா இவர் வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் ஆசிரியர் சாந்தா கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்கு கொடியேற்ற செல்வதற்காக முத்தம்பட்டி இரயில்வே கேட் அருகில் பேருந்து நிறுத்தத்தில் காலையில் நின்று கொண்டிருந்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 28 வயது மிக்கதக்க இரண்டு வாலிபர்கள் ஆசிரியர் சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிய வழிப்பறி கொள்ளையர்கள் மேலும் ஏத்தாப்பூர் பெரிய கிருஷ்ணாபுரம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்த மோகன்குமார் மனைவி மோகனா தம்பதியிடம் இருந்து தங்க செயினையும் பறித்து கொண்டு தப்பியோடினர்.

ALSO READ | போதையில் ரகளை செய்த மகன்; தீவைத்து எரித்த பெற்றோர்- வெளியான சிசிடிவி காட்சி

இந்த தொடர் வழிப்பறி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் டிஎஸ்பி, முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி சர்வீஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்தின் பேரில் வந்த வாலிபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் இருவரும் இந்தியில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர், பின்னர் அவர்களை சோதனை செய்ததில் ஒரு நாட்டு கைத்துப்பாக்கியும் 5 தோட்டாக்களும் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புஸ்பேத்திரபிங்கி (22),சதாம்ராஜா (23) என்பதும் வாழப்பாடி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர், மேலும் வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்த இருசக்கர வாகனம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருடி வந்தது தெரிய வந்தது, இதனையடுத்து வட மாநில வாலிபர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 11 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ  | போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை - கணவனை கொன்ற மனைவி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News