4ஜியின் வேகம் பத்தவில்லை என்று 5ஜி தொழில்நுட்பத்துக்கு தாவும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் கடைக்கோடி கிராமங்களில் குடிநீருக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்னும் உண்மையை உரைக்கச் சொல்லியிருக்கிறது பிதிரெட்டி பழங்குடி கிராமம்!
மேலும் படிக்க | இலவச திட்டங்கள் அல்ல; சமூக நல திட்டங்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பிதிரெட்டி அருகே ஆள் அவரமற்று அமைதியாக கிடக்கிறது இருளப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 20 பழங்குடி சமூக குடும்பlதினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கு வசித்து வருபவர்கள் குப்பை சேகரிப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இதன்மூலம் வரும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்துகின்றனர்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கிராமத்தில் தலையாய பிரச்சனையாக இருப்பது குடிநீர்தான். இவர்களது ஊரில் அமைக்கப்பட்ட போல்வெல் மற்றும் மின் மோட்டார் பழுதடைந்துவிட்டதால், அதனை அதிகாரிகள் யாரும் மாற்ற வரவில்லை. இதுதொடர்பாக இக்கிராம மக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இதனால், ஏரியில் இருக்கும் தண்ணீரையே குடிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் பிதிரெட்டி மக்கள். ஏரித் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் பக்கத்து கிராமங்களில் சென்று அங்குள்ள விவசாயத் தோட்டங்களில் தண்ணீர் பிடிக்க 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அதையும் சகித்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க செல்லும் பிதிரெட்டி மக்களை சாதி துரத்துகிறது. முகம் சுளிக்க வைக்கும் சொற்களை வாங்கிக்கொண்டு சோகத்தோடு வரும் இம்மக்களுக்கு என்னதான் தீர்வு ?
வேறு வழியில்லாமல், தங்களது சொந்தக் கிராமத்தில் உள்ள ஏரித்தண்ணீரையே குடிக்கும் நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொடுமை என்னவென்றால், அந்த ஏரித்தண்ணீரிலயே குளித்து, துணி வைத்து அந்தத் தண்ணீரையே குடிக்கும் நிலை இந்த மக்களுக்கு வாய்த்திருக்கிறது. இதனால் காய்ச்சல், இருமல், சளி போன்ற உடல்நலக்குறைவு பல பேருக்கு இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் இல்லை என்பது உயிர்வாழ்வதற்கான முதல் கோரிக்கை. அதற்கடுத்து வரிசையாய் காத்திருக்கிறது பிதிரெட்டி மக்களின் கோரிக்கைகள். மின்சாரம், சாலை வசதி, குடியிருப்பு வசதி என எதுவும் இல்லை அவர்களுக்கு. குடிக்கத் தண்ணீரே இல்லாத நிலையில், அடிப்படைத் தேவைக்கான மற்ற கோரிக்கைகளை முன்வைக்கும் தைரியம் இருக்குமா என்ன ?.
மேலும் படிக்க | கொடுத்த கடன் வந்து சேரவில்லை: நரிக்குறவப் பெண் அஸ்வினி குற்றச்சாட்டு
மாவட்டத்தின் ‘தலையாய’ பிரச்சனைகள் சார்ந்த 10 கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனித சமூகம் வாழ்வதற்குத் தேவையான குடிநீர், மின்சாரம், குடியிருப்பை மட்டுமே கேட்கிற பிதிரெட்டி மக்களின் கோரிக்கைகளையும் நிச்சயம் கேட்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு முதலில் இதுதானே ‘தலையாய’ பிரச்சனையாக இருக்க முடியும்.!!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ