மே 19 ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகும்: செங்கோட்டையன்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) குறித்த தெளிவான அறிக்கை வருகிற 19 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 15, 2020, 02:32 PM IST
  • தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு (10th Class) பொதுத்தேர்வு நடைபெறும்
  • தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்.
  • தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
  • SSLC பொதுத்தேர்வு குறித்த தெளிவான அறிக்கை வருகிற 19 ஆம் தேதி வெளியிடப்படும்.
மே 19 ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகும்: செங்கோட்டையன் title=

சென்னை: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) குறித்த தெளிவான அறிக்கை வருகிற 19 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு (10th Class) பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (K A Sengottaiyan) அறிவித்துள்ளார். ஆனால் இவரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு வார வாய்ப்பு உள்ளது என்பதால், பத்தாம் வகுப்பு (SSLC Exam) மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

மேலும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் (K A Sengottaiyan) தனது ட்விட்டர் பக்கத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விளக்கத்தையும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் (K A Sengottaiyan) பகிர்ந்து வருகிறார். முன்னதாக, 13 ஆம் தேதி "தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் (Students) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனப் பகிர்ந்திருந்தார்.

இருப்பினும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு உள்ளதால், மாணவ-மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தநிலையில், ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் (K A Sengottaiyan) செய்தியாளர்களிடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) சில மாணவ-மாணவிகள் அருகில் உள்ள வேறு மாவட்டத்திற்கு சென்று எழுத உள்ளனர். அவர்களுக்கு மாற்று வழிகளை செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இதுதொடர்பான விளக்கம் வருகிற 19 ஆம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறினார்.

மாணவர் நலன் கருதி, பெற்றோர் நிலை கருதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த ஆணையைப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்து விட்டது. மேலும் இன்னும் சில மாநிலங்களில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடக்க உள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேர்வு மையங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. 

நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்க உள்ளன. இந்த தேர்வை பொறுத்தவரையில் 2 வாரம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் முடிந்த உடனே 15 நாட்களுக்கு ஒரு முறை மாதிரி தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 3,000 மாணவர்கள், 10 கல்லூரிகளில் தங்கி நீட் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி மற்றும் மாணவர்களுக்கு தேவையான உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Trending News