TVK Vijay - DMK Sekar Babu Latest News Update: தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (TN Minister Sekar Babu) இன்றைய (டிச. 7) செய்தியாளர் சந்திப்பில், "தமிழகத்தின் அரசியல் தெரியாமல் இருக்கும் சிலருக்கு 2026 தேர்தலில், திமு 200 அல்ல 234 தொகுதிகளையும் கைப்பற்றும். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. அது யாராவது குறையும் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும். அடுக்கடுக்கான திட்டங்களை ஆட்சியில் அள்ளிக் கொடுக்கிற முதல்வரை பார்த்து, இல்லையென்று கூறுகின்ற கூட்டம் இருக்கிறது.
பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வழக்கு பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் நீதி பெற்று தரும் நீதி தேவனின் ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. திமுக இருநூறு தொகுதியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் நிலைப்பாடு 200 அல்ல 234 தொகுதிகளையம் திமுக கூட்டணி கைப்பற்றும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை (TVK President Vijay) குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா
விகடன் பிரசுரம் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் Voice of Commons ஆகியவை இணைந்து பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்கள், அம்பேத்கரிய செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் கட்டுரைகள், நேர்காணலை தொகுத்து 'அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை பதிப்பித்து, நேற்று வெளியிட்டனர். சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் நூலை வெளியிட்டார். இந்த நூலை சமூக செயற்பாட்டாளரும், அம்பேத்கரின் பேரனுமான ஆனந்த் டெல்டும்டே, ஓய்வுபெற்ற முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும் படிக்க | திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!
விஜய் என்ன பேசினார்?
இந்த விழாவில் உரையாற்றிய விஜய்,"இருமாப்புடன் 200-ஐ வெல்வோம், என்று எகத்தாளத்தோடு முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்கள் சார்பாக நான் விடுக்கும் எச்சரிக்கை நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டில் மக்களால் மைனஸ் செய்யப்படும்" என திமுகவை குறிவைத்து தாக்கினார்.
அதுமட்டுமின்றி, விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் சார்ந்த நூல் வெளியீட்டு விழாவுக்கே வரவில்லை என்றால் அவருக்கு கூட்டணி கட்சியால் எந்தளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என விஜய் பேசியிருந்தார். மேலும், திருமாவளவன் இங்கு வராவிட்டாலும் அவரது மனது இங்குதான் இருக்கும் எனவும் விஜய் பேசியிருந்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீறிய ஆதவ் அர்ஜூனா
முன்னதாக விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் தமிழ்நாட்டில் மன்னாராட்சியை ஒழிக்க வேண்டும் எனவும் இனி பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக கூடாது. தமிழகத்தை கருத்தியலை பேசக்கூடிய தலைவர்கள் தான் ஆள வேண்டும் எனவும் பேசினார். மேலும், விஜய் கருத்தியல் தலைவராக உருவெடுத்து வருகிறார் என்றும் அவர் பேசியிருந்தார். விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சுக்கள் திமுக கூட்டணியிலும் சலசலப்பை உண்டாக்கி உள்ளதாக கூறப்பட்டது.
திருமா விளக்கம்
இருப்பினும், விசிக தலைவர் திருமாவளவன் தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் தான் சுதந்திரமாக முடிவெடுத்தே இந்நிகழ்ச்சியை புறக்கணித்ததாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து திமுக கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனாவிடம் கட்சி சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் பேசினார்.
மேலும் படிக்க | “நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ