யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கொரோனா பரிசோதனை குறித்து புதிய மற்றும் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 17, 2022, 05:05 PM IST
யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு title=

சென்னை: திருத்தப்பட்ட கொரோனா பரிசோதனை வழிகாட்டு நெறிமுறகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாலு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் வெகுவாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரிசோதனை குறித்து புதிய மற்றும் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. 

திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறறைகள்:

* சளி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறி உள்ளோர் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்.

* 60 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உள்ளோர் பரிசோதனை செய்ய வேண்டும்.

* அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தொற்று அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: ஊரடங்கு விதிகளை தளர்த்தலாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!

* வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

* வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள், பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர். 

* வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தப்பட வேண்டும். 

மேலும் படிக்க: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதிரடியாக அபராதம் விதித்த அரசு!

* கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. 

* அதேபோல மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை. 

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை சார்பில் திருத்தப்பட்ட கொரோனா பரிசோதனை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News