வேலூர் அருகே பெருமுகையில் பா.ஜ.கவின் மூன்று நாள் கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கொரோனா தடுப்பூசி குறித்து அனைத்துக் கட்சியினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தமிழக அரசு பழிவாங்கும் நோக்குடன் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், தவறு செய்பவர்கள் யார்? என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும் என கூறினார்.
ALSO READ | எங்கே இருக்கிறார் ராஜேந்திராபாலாஜி? சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
தொடர்ந்து பேசிய அவர், "மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என்ன பேசினாரோ அதைத்தான் தற்போது வழக்காக பதிவு செய்யப்பட்டு வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆதாரம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்" எனக் கூறினார். மாரிதாஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாநில அரசு தனிநபரின் குரல்வளையை நெறிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு குரல் கொடுக்கும்.
தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறும் என மாரிதாஸ் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை. அரசும், காவல்துறையும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதை கருத்து சுதந்திரமாக கூறியுள்ளார் எனத் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, குறைந்த அடிகள் மட்டுமே அந்த பாடல் கொண்டிருப்பதாகவும், முழுமையாக அப்பாடலை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ALSO READ | மாரிதாசை போல் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? சி.வி.சண்முகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR