பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த 4 0பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எம்பி.சுப்ராயன் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பளையத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகளுக்கும் பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ராயன், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்தி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு உழைத்த கழக நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இதனையடுத்து பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசும் ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்.
மேலும் படிக்க | வயிற்று பிழைப்பிற்காக சென்ற மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!
முன்னதாக திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ராயன் பேசினார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் வாக்களித்த மக்களும் நன்றிதெரிவித்து உரையை தொடங்கிய அவர், 'வருகிற 27ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டதொடரில் 28 ம் தேதி முதல் நடைபெறும் விவாவத்தில் தமிழகம் புதுவையின் 40பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றினைந்து தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டி வலியுறுத்துவோம்.
மேலும் பாராளுமன்ற உறிப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் 5கோடி நிதியில் 90இலட்சம் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினரின் ஆறு தொகுதிகளுக்கும் சேர்த்து 4கோடியே 10இலட்சம் தான் நிதி கிடைக்கிறது. இதை ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து வழங்கி குறைவான நிதியை கொண்டு தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடிவதில்லலை.
எனவே தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் நிதியை போல் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18கோடியாக உயர்த்த வேண்டியும் வலியுறுத்தி ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம்' என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ