கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் இவர், 4 நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான விளாத்திகுளத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்புற கேட் அடைக்கப்பட்டு வழக்கம்போல் பூட்டப்பட்டு இருந்தது.
ஆனால் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலமுருகனின் குடும்பத்தார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, 2 மர பீரோக்கள், 3 ஸ்டீல் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சைன், மோதிரம், கம்மல் என 16 சவரன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இத்துடன் கொள்ளையர்கள் அங்கிருந்த கேஸ் ஸ்டவ், அரிசி, சிப்பம் சிறிய மூட்டை, வெங்காயம், பூண்டு, பீரோவில் இருந்த பட்டு சேலைகள் உள்ளிட்டவற்றை திருடி சென்றதும் தெரிய வந்தது.
மேலும் படிக்க | கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?
இது குறித்து பாலமுருகன் அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு தடவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் கொள்ளையர்கள் அதிக நேரம் அந்த வீட்டிலேயே ஓய்வெடுத்து விட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து அந்த வீதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இனி வீட்டில் நகை, பணம் இருப்பவர்கள் மட்டும் திருடர்களுக்கு பயப்படாமல், சதாரண காய்கறி, மளிகை பொருட்கள் வைப்பில் வைத்துள்ளவர்களும் பயப்படவேண்டி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | எனக்கு இருந்தது ஒரே வீடு தான்... கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR