சின்னக் கலைவாணர் விவேக் சாலை - வெளியானது புகைப்படம்

விவேக் பெயர் கொண்ட சாலையின் பெயர் பலகை புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 1, 2022, 08:55 PM IST
  • சாலைக்கு விவேக் பெயர்
  • விவேக் மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு
  • விவேக் பெயர் சூட்ட தமிழ்நாடு அரசு அரசாணை நிறைவேற்றம்
சின்னக் கலைவாணர் விவேக் சாலை - வெளியானது புகைப்படம் title=

நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்த சாலைக்கு அவரது பெயர் வைப்பதற்கான அரசாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நகைச்சுவை நடிகர் விவேக். நகைச்சுவையை மட்டும் செய்யாமல் அதன் மூலம் முற்போக்கான கருத்துக்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்தச் சூழலில் சமீபத்தில் விவேக்கின் மனைவி அருள்செல்வி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்து இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தார். அருள்செல்வி கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமென ரசிகர்களும் கூறிவந்தனர்.

vivek

இதனையடுத்துசாலைக்கு விவேக் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அந்தப் பெயர் பலகை திறப்பு விழா 3ஆம் தேதி நடக்குமெனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | சாலைக்கு விவேக் பெயர்... அரசாணை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு ரசிகர்கள் நன்றி

இந்நிலையில்,சின்னக் கலைவாணர் விவேக் பெயர் கொண்ட சாலையின் பெயர் பலகை புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | மே தினம் விடுமுறை - 200 கோடி ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News