அரசு அனுமதியின்றி கோயிலில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: HC

தமிழக அரசின் அனுமதியின்றி கோயில்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Last Updated : Jun 10, 2019, 12:43 PM IST
அரசு அனுமதியின்றி கோயிலில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: HC title=

தமிழக அரசின் அனுமதியின்றி கோயில்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருவள்ளூர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் சேதுராமன், தமிழகத்தில் உள்ள கோவில்களில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று  நடைபெற்றது. அதன் முடிவில், "தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும், அதிகாரமின்றி கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். 

மேலும், அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களை அப்பகுதி மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினால், கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். 

 

Trending News