தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே கொடுக்கல - நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

தமிழ்நாடுக்கு மத்திய அரசு எந்தவகையிலும் உதவி செய்வதில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 5, 2024, 02:47 PM IST
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி
  • தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒன்னும் கொடுப்பதில்லை
  • புள்ளி விவரங்களுடன் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே கொடுக்கல - நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி title=

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி வழங்குவது குறித்து சில புள்ளிவிவரங்களை கொடுத்தார். அதற்கு தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதில் கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு எந்தவிதத்திலும் உதவி செய்வதில்லை என்று குற்றம்சாட்டினார். மத்திய அரசு கொடுத்த பணத்தைவிட இருமடங்கு தொகையை தமிழ்நாடு கொடுத்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, " மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது.  மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை 2027 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. ஒன்றிய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்கமுடியும். 

மேலும் படிக்க | சென்னை மக்கள் கவனத்திற்கு... முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - என்ன காரணம்?

ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு 72,000 ரூபாய் கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு 1.68 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என10 ஆண்டுகளாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. 

ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய் வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். தற்போது கூட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டம் 63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50% நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் வரை தமிழ்நாட்டில் இருந்து 6.23 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரி வருவாய் குறித்து எந்த தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. நம்மிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு நமக்கு அங்கிருந்து கிடைப்பது 29 பைசாதான். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது

2014ல் இருந்து 2023 மார்ச் வரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து ₹2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு கொடுத்தால் ₹15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு வாங்கும் கடன்களை முதலீட்டுக்குள் கொண்டு வருகிறது. கடன் வாங்கும் தன்மையை தமிழ்நாடு அரசு எப்போதும் சரியாக மேலாண்மை செய்து வருகிறது" என புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்தார்.  

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம்... காரணத்தை சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News