Vaikunta Ekadasi 2022: சொர்க்கவாசல் திறந்தன! வைணவ ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்...

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டன...

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 13, 2022, 09:04 AM IST
  • இன்று வைகுண்ட ஏகாதசி
  • போகி பண்டிகையன்று வைகுண்ட ஏகாதசியும் இணைந்து வருவது சிறப்பு
  • வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன
Vaikunta Ekadasi 2022: சொர்க்கவாசல் திறந்தன! வைணவ ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்... title=

சென்னை: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டன. இந்த வருடம் போகி பண்டிகையும் சொர்க்கவாசல் திறப்பு வைபவமும் ஒரே நாளில் அமைந்தது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

கொரனா தொற்று கட்டுப்பாடுகளால் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. 

மேலும் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்ய உள்ளனர்.

மயிலாடுதுறை திருஇந்தளுரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாகும். 

திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை (Vaikuntha Ekadashi) முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

temple

பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதசியை (Vaikuntha Ekadashi) முன்னிட்டு அருள்மிகு கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருகோவிலில் சொர்க்க வாசல் திறப்பு...

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலுமான அருள் மிகு கோட்டை அழகிரி நாதர் சுவாமி திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் மிக விமர்சையாக கொண்டாட பட்டது.

temple

அதிகாலை 5.15 மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வளம் வந்து பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள  சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லக்கில் பவனி வந்தனர்.

திருக்கோவில் முழுவதும் காவல்துறையினர் பக்தர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர வேண்டும் என அறிவுறுத்தி  நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ | திருப்பதி ஏழுமலையானுக்கும் சிவனுக்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News