தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதி நகல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த பிறகு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.. இதைத் தொடர்ந்து 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் உள்ளது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான இந்த குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சா்சிம்ரன் சித் சிங், சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தொழிற்சாலை குறித்து தொழில்நுட்ப அறிவு சார்ந்த அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை பரிந்துரையின்படி தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சுற்றுச்சூழல் வல்லுனர்கள், ஆலை எதிர்ப்பாளர்கள் 2 பேர் என்று மொத்தம் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read | புதுச்சேரியில் BJP கூட்டணி ஆட்சி அமைக்கும்: கருத்துகணிப்பில் தகவல்
மருத்துவ பயன்பாட்டிற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மட்டுமே ஆலையை இயக்க வேண்டும். வேறெந்த நோக்கத்துக்கும் ஆலையை இயக்கக்கூடாது என்று அனுமதி கடிதத்தில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வழங்கிய உத்தரவை ஆலையை இயக்க முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 டன்னுக்கும் மேலாக மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பாதுகாப்பான முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் முழு கவனம் செலுத்த உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் தனியாக ஆக்சிஜன் பிரிவு அமைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
Also Read | தோனிக்கு பதிலாக வரப்போகும் CSK கேப்டன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR