தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஆயிரம் ரூபாய் தொகையை வழங்கியுள்ளது. பொதுமக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, திருமணமான, குழந்தைகள் உள்ள, ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு - ஜனவரி 12 கிளைமேக்ஸ்!
இந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்கள், மாவட்ட அளவிலான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைப் பெறுவதற்கு 3 கட்டங்களாக விண்ணப்ப முகாம்கள் நடத்தப்பட்டன. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, அவை அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. பின்னர், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் முதல் கட்ட பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்ப முடிவு நிலை குறித்த மெசேஜ் விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மெசேஜ் வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் தீர்வு கிடைக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை பெற மேலும் ஆயிரக்கணக்கான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
உரிமைத் தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள் மற்றும் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்ட பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் இருக்கும் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தான் உரிய பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக முன்கூட்டியே உரிமை தொகையை வழங்கியிருகிறது தமிழ்நாடு அரசு.
மேலும் படிக்க | சிதம்பரம் கனகசபை மீது வழிபாடு நடத்த போராடுவீர்களா அண்ணாமலை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ