படுக்கை வசதி, கழிப்பறை வசதி கொண்ட 2000 பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு

இந்த வருட மே மாதத்திற்குள் படுக்கை வசதியுடன் கூடிய 2,000 புதிய பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Last Updated : Jan 23, 2018, 10:07 AM IST
படுக்கை வசதி, கழிப்பறை வசதி கொண்ட 2000 பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு title=

இந்த வருட மே மாதத்திற்குள் படுக்கை வசதியுடன் கூடிய 2,000 புதிய பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் பயன்பெறும் வகையில் கழிப்பறை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் வாங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அதைக்குறித்து போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தனியார் பேருந்துகளுக்கு இணையான அரசு சொகுசுப் பேருந்துகள் வாங்க முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய 40 பஸ்கள், கழிப்பறை வசதியுடன் கூடிய 20 பஸ்கள் உள்ளிட்ட 2000 புதிய பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசு பஸ்கள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும். இது தவிர 200 பேட்டரி பேருந்துகளை மத்திய அரசு பங்களிப்புடன் வாங்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பி தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சொகுசுப் பேருந்துகள் வாங்க அரசு முடிவு செய்துள்ளதை, மக்கள் ஏற்பார்களா? என்பது பற்றி பின்னர் தெரியவரும்.

Trending News