பிப்., 14 ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்..!

வரும் 14 ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது...!  

Last Updated : Feb 8, 2020, 10:13 AM IST
பிப்., 14 ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்..! title=

வரும் 14 ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது...!  

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை பதிவு செய்தனர். 

அன்றைய தினம் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்ய ஆளுநர் நாள் குறித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் நாட்கள் ஆகியவை முடிவு செய்யப்படும்.  

 

Trending News