SC/ST Sub Quota: அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்றும், பட்டியல் பிரிவு மற்றும் பட்டியல் பழங்குடியினரும் பிரிவில் உள்ள பின்தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை மாநில அரசு அளிக்கலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மறுஆய்வு மனுவை தாக்கல் செய்த தொல். திருமாவளவன்
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பில் சில தவறுகளை சுட்டிக்காட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தனது மனுவில் தொல். திருமாவளவன் கூறியது
அதில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவில் உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரசமைப்பு சாசனம் உறுதியாகியுள்ள அடிப்படை உரிமைகள் இந்த வழக்கில் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசமைப்பு சாசனத்தின் வரையறைக்கு இந்த தீர்ப்பு எதிராக உள்ளது என்றும், உள் ஒதுக்கீடு மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும், பின்தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள் ஒதுக்கீடுக்கான வரம்பை நிர்ணயிக்க தீர்ப்பில் நீதிபதிகள் தவறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
உள் ஒதுக்கீடு விவகாரம் தொல். திருமாவளவன் மனு தள்ளுபடி
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரிசீலித்து, "ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அளித்த உள் ஒதுக்கீடு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும், அருந்ததியர் உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை என தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 10 மறுஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?
மேலும் படிக்க - ’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ