மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்!!

மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2019, 09:58 AM IST
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்!! title=

மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது!!

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி முடிவுகள், போட்டியிடும் தொகுதி அறிவிப்புகள் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு, தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பல இடங்களில் பணம், பொருட்கள் பறிமுதல் வருகின்றன. இதற்கிடையே அங்கீகாரம் கிடைக்காத சில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் தகவல்களும் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், சீமானை ஒருங்கிணைப்பாளராக கொண்ட நாம் தமிழர் கட்சி, கடந்த முறை தேர்தலில், இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. வரும் மக்களவை தேர்தலிலும், அதே சின்னத்தை வழங்க, தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி இருந்தது. ஆனால்,  அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இதை தொடர்ந்து, தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அந்தவகையில், தற்போது நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது. 

இனிப்பான மற்றும் மண் மரபு சார்ந்த கரும்புடன், விவசாயி இருப்பது போன்ற சின்னம் கிடைத்திருப்பது, நாம் தமிழர் கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கபட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News