சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: TN Govt..!

சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

Last Updated : Nov 19, 2019, 04:58 PM IST
சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: TN Govt..!  title=

சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், இதற்காக இன்று முதல் நவம்பர் 26 ஆம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அரிசி அட்டை பெற விரும்பினால் விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை நகலை இணைக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் உடனே பரிசீலிக்கப்படும் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10,19,491 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதலமைச்சர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்கள்.

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26.11.2019 வரை என்ற www.tnpds.gov.in  இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News