ஆளுநரின் வசதிக்கேற்ற நாளில் முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்று பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்பதில் தெளிவின்மை நீடிக்கிறது. சசிகலா பதவியேற்பு தேதி தொடர்பாக ஆளுநர் மற்றும் சசிகலா இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை நான் எதிர்க்கிறேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் பொன்னையன்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாவது:
சிலர் அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதிமுக நலத்திட்டங்களுக்காகவே மக்கள் தேர்தலில் வாக்களித்தார்கள்.
ஒருமனதாகவே சசிகலா பொதுச்செயலாளராகவும், முதல் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மத்திய அரசுக்கும், அதிமுக அரசுக்கும் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. சசிகலா ஆளுநரின் வசதிக்கேற்ற நாளில் முதல்வராக பதவியேற்பார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.