பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 8, 2023, 01:42 PM IST
  • அதிமுக தலைமையில் தான் கூட்டணி
  • பாஜக தான் இனி முடிவெடுக்க வேண்டும்
  • அதிமுக சீனியர் செல்லூர் ராஜூ அதிரடி
பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ title=

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான நகர்வுகள் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி ஓரளவு முடிவாகிவிட்டாலும், அதிமுக கூட்டணி என்பது மதில்மேல் பூனையாக இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை தமிழகத்தில் பெரும் கட்சியாக இருப்பதால் எங்கள் தலைமையில் வரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது தேசியக்கட்சியான பாஜக மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறது. அதனால் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமைப்போம் என தெரிவித்து வருகிறார். இது அதிமுக தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை கூட்டணிக்கு நாம் தான் தலைமை தாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

செல்லூர் ராஜூ திட்டவட்டம்

அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதை தெரிவித்துவிட்டார். இது குறித்து மதுரையில் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாஜக தலைமையில் கூட்டணி என்றால் அதனை அவர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. எங்களுடன் வருபவர்களை சேர்த்து தேர்தலை சந்திப்போம் என தெரிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | Vande Bharat Express: பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் எங்கெல்லாம் நிற்கும்? அந்த 3 ஸ்டேஷன்

அண்ணாமலை போடும் கணக்கு

ஆனால், இந்த முறை பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை மனதில் வைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. ஒவ்வொரு முறையும் கூட்டணிக்காக அதிமுகவிடம் சென்று சீட்டு பேரம் பேசுவதை விரும்பாத அவர், இந்த முறை தனியாக போட்டியிடலாம் என்ற முடிவில் இருக்கிறார். பாஜகவின் தேசிய தலைமை மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் அதிமுக கூட்டணி என்பதை சொல்லிவிட்டனர். இதனால், சலசலப்பில் இருக்கும் அண்ணாமலை சீட்டு பேரத்தையாவது ஏற்ற வேண்டும் என்பதற்காக இப்போதே அதற்கேற்ப காய்களை நகர்த்த முடிவு செய்திருக்கிறார். அதற்கேற்ப, தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி என்று கூறிக் கொண்டிருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்கின்றனர். 

சீனியர்கள் அப்செட்

அண்ணாமலையின் இந்த கருத்துகளை தமிழக பாஜகவில் இருக்கும் சீனியர்கள் ரசிக்கவில்லை. ஆளும் கட்சியாக கடந்த முறை இருந்த அதிமுக ஊரக பகுதிகள் வரை பலமாக இருக்கிறது. அப்படி இருக்கும் கட்சியுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தால் மட்டுமே எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்கும். ஒரு சில தொகுதிகளில் வெற்றியும் பெறலாம் என நினைக்கின்றனர். இதற்கு அண்ணாமலையின் நடவடிக்கைகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக நினைக்கும் அவர்கள், மேலிடத்துக்கு இது குறித்து ரிப்போர்ட் அடித்து வருகின்றனர். ஆனால் அது அவர்களுக்கு கை கொடுத்தமாதிரி தெரியவில்லை. இதனால், இப்போதைக்கு சைலண்ட் மோடில் இருக்கலாம். தேர்தல் நெருங்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கின்றனராம். 

மேலும் படிக்க | PM Modi: தென்மாவட்ட மக்களுக்கு நற்செய்தி... சிறப்பு ரயிலை தொடங்கிவைக்கும் பிரதமர் - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News