Masala Tea Health Benefits In Tamil: டீ குடிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். காலையில் எழுந்த உடன் ஒரு டீ குடிப்பது, மாலையில் பொழுதுசாயும் போது ஒரு டீ குடிப்பது என பலருக்கும் இது அன்றாட பழக்கவழக்கமாகிவிட்டது எனலாம். டீ குடித்தால் மனநிலை ரீலாக்ஸாக இருக்கும், தலைவலி வந்தால் டீ குடிப்பது, சந்தோஷம் வந்தால் டீ குடிப்பது, துக்கம் வந்தால் டீ குடிப்பது, வெற்றி கிடைத்தால் டீ குடிப்பது என வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் பலருக்கும் டீ என்பது முதன்மையான ஒன்றாக இருக்கும்.
குளிர்காலம் என்றாலும் சரி, மழைக்காலம் என்றாலும் சரி, வெயில் காலம் என்றாலும் சரி டீ குடிப்பதை யாரும் கடைவிடப்போவதில்லை. டீயில் வெள்ளை சர்க்கரை மட்டுமின்றி நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி என இனிப்புக்காக பல்வேறு பொருள்களையும் சேர்த்து அருந்தலாம். டீ என்பது மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.
குறிப்பாக, பல்வேறு சுவையில் டீ குடிப்பார்கள். இஞ்சி டீ, ஏலக்காய் டீ என தனித்தனியே நீங்கள் டீக்கடைகளில் பல்வேறு வகை டீக்களை குடித்திருப்பீர்கள். அந்த வகையில், மசாலா டீ என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒன்றாகும். தினமும் இந்த மசாலா டீயை வீட்டில் தயாரித்து குடித்தால் எளிமையாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
மேலும் படிக்க | இந்த நான்கு பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடவே கூடாது..!
ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், மிளகு ஆகிய மசாலா பொருள்களை கலந்து இந்த சுவையான டீயை நீங்கள் தயாரிக்கலாம். இதனால், செரிமான கோளாறில் இருந்து ரத்த சர்க்கரை அளவு வரை அனைத்தையும் சீராக்கும். மேலும், இதில் பல ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அப்படியிருக்க, மசாலா டீயை தினமும் குடித்தால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
செரிமானத்திற்கு உதவும்
மசாலா டீயில் மிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி உள்ளிட்டவை சேர்க்கப்படும். இவை அனைத்தும் செரிமான பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும். குமட்டல் போன்ற பிரச்னைகள் தடுக்கலாம். பேக்டீரியா தொற்றுகளையும் தடுக்கும்.
ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது
மசாலா டீ என்பதில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கிறது. இதில் ஏலக்காய் மற்றும் இலவங்கம் ஆகியவை இருப்பதால் செல்கள் சேதமாவதில் இருந்து பாதுகாக்கலாம்.
அலர்ஜிகள் குறையும்
மசாலா டீயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே தினந்தோறும் மசாலா டீயை குடித்தால் உடலில் வீக்கம் போன்ற அலர்ஜிகளை தடுக்கலாம்.
எனர்ஜி அதிகமாகலாம்
மசாலா டீயில் காஃப்பின் அதிகமாக உள்ளது. இதனை நீங்கள் காலையில் குடிப்பதால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம். இரவில் குடிப்பதை தவிர்க்கவும். தூக்கத்தை பாதிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையிலும், வீட்டு வைத்தியங்களின் அடிப்படையிலும் எழுதப்பட்ட ஒன்றாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ