Bigg Boss 8 Tamil Soundariya Proposes Vishnu : தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால், ஒரு சில ஷோக்கள் மட்டுமே சில சீசன்களை தாண்டுகின்றன. அப்படி, மக்களின் வரவேற்பை பெற்று, 8வது சீசனை கடந்து சென்று காெட்டிருக்கும் நிகழ்ச்சி, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது குடும்பத்தினர் வரும் சுற்று நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
குடும்பங்கள் வரும் சுற்று!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் வந்து குடும்பத்தினரை சந்திக்கும் பகுதி நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை ஸ்டார் போட்டியாளர் தீபக்கின் மனைவியும் குழந்தையும் வந்து சென்றனர். அதே போல முத்துக்குமரனின் தந்தை-தாயும் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதே போல ஜாக்குலினின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். இவர்கள் குடும்பத்தினராக மட்டுமன்றி, பல சமயங்களில் நண்பர்களாகவும் இருப்பர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா!
செளந்தர்யாவை சர்ப்ரைஸ் செய்த விஷ்ணு…
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில், முக்கிய பாேட்டியாளர்களுள் ஒருவராக கருதப்படுபவர் செந்தர்யா. இந்த சீசனின் ஆரம்பம் முதலேயே அவர் தனது தனித்துவமான கேரக்டரால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். இவரது குரல் வித்தியாசமாக இருப்பதால் ஹவுஸ் மேட்ஸ் அதை வைத்து அவ்வப்போது கலாய்ப்பதுண்டு. இதையெல்லாம் தாண்டி, தற்போது 80 நாட்களுக்கும் மேல் கடந்து, இப்போட்டியினை நன்றாக விளையாடி வருகிறார்.
#Day82 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/YfTAxXEpOX
— Vijay Television (@vijaytelevision) December 27, 2024
இன்றைய எபிசாேடுக்கான ப்ரமோ, இன்று வெளியாகி இருக்கிறது. அதில், விஷ்ணு, செளந்தர்யாவை சந்திக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதில், ஒரு தட்டில் க்ரீமால், “Will You Marry Me?” என்று செளந்தர்யா எழுதி அவரிடம் காண்பித்திருக்கிறார். இதைப்பார்த்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கோஷம் போட்டு உற்சாகம் அடைந்தனர். அதற்கு விஷ்ணு, “லவ் யூ டூ. இந்த மாதிரி என் லைஃப்ல நடந்ததே இல்ல. எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னாேட பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்று கூறிவிட்டு, தனக்கு அனைத்துமே மறந்து விட்டதாக பிறரிடம் கூறி சிரிக்கிறார். மேலும், “நான் உண்ண சர்ப்ரைஸ் பண்ணலாம்னு வந்தா, நீ என்ன சர்ப்ரைஸ் பண்ணிட்டியே..” என்கிறார். இவர்கள் இருவரும் சீக்கிரமே கல்யாண சோறு போடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
முன்னாள் போட்டியாளர்..
செளந்தர்யாவின் காதலர் விஷ்ணு, கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் 7 சீசனில், முக்கிய போட்டியாளராக இருந்தவர். டாப் 5 பாேட்டியாளர்களுள் ஒருவராக இருந்த இவர், கடைசி நாளில் வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, சக போட்டியாளர் பூர்ணிமாவை தனது வலையில் விழவைக்க பார்த்தாக கூறப்படுகிறது. பூர்ணிமாவிற்கும் இவர் மீது குட்டி க்ரஷ் இருந்தது. இதே போல, அப்போதும் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் எபிசோட் நடைப்பெற்றது. அப்போது விஷ்ணுவிற்கு அட்வைஸ் செய்த அவரது குடும்பத்தினர், பூர்ணிமாவிடமிருந்து தள்ளியிருக்குமாறு அவரை எச்சரித்தனர். இதனால் இருவரும் கடைசியில் பேசிக்கொள்ளாத நிலை ஏற்பட்டது. வெளியில் வந்த பிறகு, இவர்கள் சந்தித்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கமல் கூட இதுவரை செய்ததில்லை! பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி செய்த செயல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ