Seeman Twitter Account Withheld: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடன் ட்விட்டர் கணக்குகளை அரசு அளித்த புகார் கடித்ததின் பேரில் முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் அந்த கடித்தத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அந்த கடிதத்தில்,"வெளிப்படைத்தன்மையின் நலனுக்காக, அதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் எழுதுகிறோம். @SeemanOfficial என்ற உங்கள் ட்விட்டர் கணக்கு குறித்து இந்திய அரசாங்கத்திடம் இருந்து ட்விட்டர் அதிகாரப்பூர்வ கடிதங்களைப் பெற்றுள்ளது. உங்கள் கணக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 விதியை மீறுவதாக உள்ளது என கடிதங்கள் கூறுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், அக்கட்சியின் செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராஜன், மற்றொரு நிர்வாகி விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் கணக்கும் இதேபோல் முடக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ட்விட்டரின் கடிதத்தை தவிர, அக்கட்சியின் சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
Source : சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், NTK தலைவர் சீமானின் @SeemanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தை முடக்கியுள்ளார்.
ஐடி சட்டத்தின் பிரிவு 79 இன் கீழ் இந்தியாவில் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியை நிறுத்துமாறு ஷங்கர் ஜிவால் நோடல் அதிகாரியிடம்… https://t.co/ttUgpMPunj
— Voice Of Savukku Shankar (@voiceofsavukku) May 31, 2023
மேலும், இது ஹேக்கர்களால் அல்லாமல் ட்விட்டர் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 விதியை மீறியதாக இவர்களின் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கமோ அல்லது ட்வீட்டோ இதேபோல் முடக்கப்படுவது குறித்து ட்விட்டர் விதிகள் கூறுகையில்,"நீங்கள் ஒரு ட்வீட் அல்லது கணக்கு நிறுத்தப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தால், அதன் அர்த்தம் என்ன, அது ஏன் நடந்திருக்கலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மில்லியன் ட்வீட்கள் வெளியிடப்படுவதால், பயனர்களின் கருத்தை மதிக்க வேண்டும், அதே நேரத்தில் பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ட்வீட்கள் மற்றும்/அல்லது ட்விட்டர் கணக்கு உள்ளடக்கத்திற்குப் பொருந்தக்கூடிய சட்டங்கள் உள்ளன. எங்கள் சேவைகளை எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து சரியான மற்றும் சரியான நோக்கமுள்ள கோரிக்கையைப் பெற்றால், குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட உள்ளடக்கத்திற்கான அணுகலை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்கும்.
செல்லுபடியாகும் சட்டக் கோரிக்கையை வழங்கிய குறிப்பிட்ட அதிகார வரம்பு அல்லது உள்ளூர் சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்பட்ட உள்ளடக்கம் போன்றவற்றுக்கு மட்டுமே இத்தகைய வகையில் நிறுத்திவைக்கப்படும்.
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு வெளிப்படைத்தன்மை இன்றியமையாதது, எனவே தடுக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான அறிவிப்புக் கொள்கை எங்களிடம் உள்ளது. திறந்த மற்றும் சுதந்திரமான தகவல் பரிமாற்றம் ஒரு நேர்மறையான உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ட்வீட்கள் தொடர்ந்து வரவேண்டும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த முடக்கம் தற்காலிகமானதாக அல்லது நிரந்தரமாக முடக்கப்படுமா என்பது பயனரின் விளக்கத்தை பொறுத்து அமையும் என தெரிகிறது.
முடக்கப்பட்ட அண்ணன் சீமானின் ட்விட்டர் https://t.co/1yqOMEc7GY pic.twitter.com/0hNcpGvIDf
— Duraimurugan (@Saattaidurai) May 31, 2023
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் கூறுகையில்,"சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது. கருத்து சுதந்திரம் பேசும் கண்ணியவான்களே நாங்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா" என கேள்வியெழுப்பியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ