அதி கனமழை எச்சரிக்கை... இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறை - தேர்வுகள் ஒத்திவைப்பு

School Colleges Leave: டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை மட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 25, 2024, 09:22 PM IST
  • 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
  • 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
  • சென்னையிலும் வரும் நாள்களில் கனமழைக்கு வாய்ப்பு
அதி கனமழை எச்சரிக்கை... இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறை - தேர்வுகள் ஒத்திவைப்பு title=

School Colleges Leave Latest News Updates: வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபரில் தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிந்தது. 

சென்னையில் கடந்த அக்டோபர் மாதமே 14, 15 பெய்த கனமழையால் நகர் பகுதிகளும், புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதுவும் கடந்த சில நாள்களுக்கு முன் தென்மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு இருந்தது. 

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு  மண்டலம்

அந்த வகையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில், காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக  வலுப்பெற்றது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் சென்னை வானி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள்  மற்றும்  அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை - திரிகோணமலையிலிருந்து   தென்கிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து   தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 980 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

மேலும் படிக்க | Important Order | இரட்டை இலை யாருக்கு? ஒரு வாரத்தில் முக்கிய உத்தரவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதி கனமழை எச்சரிக்கை

இதனால் தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது. நவ. 27, 28ஆம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாள்கள் வடகடலோர மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை நாளை (நவ.26) பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்ச் அலர்ட்

அதே நேரத்தில், நாளை ஒருசில இடங்களில்  கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்,  திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நாளை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அவரது X தளத்தில்,"நமது காற்றழுத்த தாழ்வு மண்ணடலத்தின் குறைந்த அளவிலான சுழற்சி வெளிப்பட்டுள்ளது. இது இங்கிருந்து வடமேற்கு திசையில் நகரும். (இன்று) காலையில் சொன்னபடி, எதிர்பார்த்தபடி, நவம்பர் 26 மற்றும் 27 அன்று டெல்டா மண்டலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது" என பதிவிட்டுள்ளார். மேலும், அதுசார்ந்த புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். 

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

இது ஒருபுறம் இருக்க, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை (நவ.25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், கனமழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, திருவாரூரிலும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும்  வெளிவரவில்லை.

மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகை தொடர்பாக வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News