சம்பா சாகுபடிக்கு 10 நாட்களில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது. அந்த ஆவணங்களில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது.
இன்றைய மனு மீதான உத்தரவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடாகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என இன்றைய உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு கண்காணிப்பு குழுவவை 3 நாட்களில் அணுகவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. .
— AIADMK (@AIADMKOfficial) September 5, 2016