புது டெல்லி: தமிழக அரசின் அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், "சனாதன ஒழிப்பு மாநாடு" நிகழ்ச்சியில் கலந்துக்கொண் கொண்டு பேசினார். அப்பொழுது சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்து குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி, சனாதானம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது. அதேபோல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சு விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் மீது டெல்லி மற்றும் பீகார் போன்ற இடங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகக் கூறி, பீகார் மாநில முசாபர்பூரில் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் சிவில் நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக சுதிர் குமார் ஓஜானே குற்றம் சாட்டியுள்ளார். அவரின் புகாரில், "உதயநிதியின் இந்த கருத்து கோடிக்கணக்கான இந்து மத மக்களை அவமதித்து, அவர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது என்று சுதிர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.
மேலும் உதயநிதியின் இந்த பேச்சு நாடு முழுவதும் இந்து மற்றும் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இதுபோன்ற கருத்துக்களை பேசியுள்ளார். எனவே அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் மீது பிரிவு 500, 504, 295, 295A, 298, 120 (B) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார். அவரின் புகாரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கை செப்டம்பர் 14 ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கிறது.
மேலும் படிக்க - “இதுதான் திராவிட மாடல்.. வழக்கு போடுங்க பாத்துக்குறோம்” - உதயநிதி!
டெல்லி காவல் நிலையத்தில் புகார்:
அதேபோல உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசில் 2 புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் மற்றும் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா ஆகியோர் டெல்லியில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மீது புகார் அளித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் ராவணன் பரம்பரையை சேர்ந்தவர் -தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு பாகேஷ்வர் தாமில் உள்ள தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்பவர் கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் ராவணனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறிய அவர், இந்திய சனாதன மக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இது கடவுள் ராமரின் நாடு, இந்த உலகத்தில் சூரியனும் நீரும் இருக்கும் வரை, ராமரின் நாடு என்றும் நிலைத்திருக்கும். இப்படி பலர் வந்து போவார்கள். அத்தகைய மிருகங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது எனக் காட்டமாகவும் ஆவேசமாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க - அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - நக்கலாக டீல் செய்த உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன பேசினார்?
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், "இந்த மாநாட்டிற்கு சனாதான எதிர்ப்பு மாநாடு என பெயரிடாமல், சனாதன ஒழிப்பு மாநாடு என பெயர் வைத்ததற்கு இதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது. அதேபோல் தான் சனாதனமும். அதை எதிர்க்க கூடாது, அதனை ஒழிக்க வேண்டும்.
சனாதானம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதானம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. அதன் அர்த்தம் நிலையானதாகவும் மாற்ற முடியாததாகவும் இருப்பது. ஆனால் நாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம் தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும்" எனக் குறிப்பிட்டார். அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு பாஜக உட்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி பாஜகவின் அனைத்து மாநில தலைவர்கள் என உதயநிதி ஸ்டாலினை நேரடியாக விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ