Minister Udhayanidhi Stalin on Ayodhya Ramar Temple Invites: திமுக இளைஞரணியின் 2ஆவது மாநில மாநாடு வரும் ஜன. 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்தார்.
மிகப்பெரிய சவால்
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), "இந்த சுடர் ஓட்டத்திற்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து தொடங்கி வைத்துள்ளேன். இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு சேலம் வரை சுமார் 310 கிலோ மீட்டர் இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது.
இரண்டு முறை இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. தலைவர் இளைஞர் அணிக்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் இந்த மாநாடு. இதை நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.
மேலும் படிக்க | Good News: விரைவில்.. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்
இது கொள்கை கூட்டம்
கடந்த 9 ஆண்டுகளாக மாநில உரிமைகளை அதிமுக ஆட்சியில் நாம் முழுமையாக கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் நாம் இழந்துள்ளோம். இவை அனைத்தையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவரை இந்திய அளவில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படவில்லை. குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இனி இந்திய வரலாற்றில் இதுபோன்ற மாநாடு நடத்த முடியாது என காண்பிக்க வேண்டும் என்றார். கூடி கலைந்த கூட்டம் அல்ல, கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும்" என பேசினார்.
பாசிச இருளகற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்… pic.twitter.com/M9tWmlXhhV
— Udhay (@Udhaystalin) January 18, 2024
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் இரண்டு பேரிடர் ஏற்பட்டதின் காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
3 முதல் 4 லட்சம் இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். தற்போது ஏற்றப்பட்ட சுடர் திமுக தலைவரிடம் (CM MK Stalin) மாநாட்டின் போது ஒப்படைக்க உள்ளோம். இரு சக்கர வாகன பேரணி, புகைப்பட கண்காட்சி, பேச்சாளர்கள் உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
85 லட்சம் கையெழுத்துக்கள்
சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணியின் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் அல்ல, அனைவரும் எதிர்பார்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னெடுப்பாக மாநாடு அமையும் என்றார். மேலும், 9 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இழந்த உரிமைகளை மீட்கின்ற வகையில் இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் இந்த மாநாடு அமையும். இந்த மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் இருந்த் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி உள்ளனர்.
50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என்ற இலக்கை நோக்கி நீட் தேர்வு விலக்கு கையெழுத்துக்கள் பெறப்பட்டது. தற்போது 85 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நானே நேரடியாக டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன்" என்றார்.
ஏன் ராமர் கோவில் எதிர்ப்பு?
ராமர் கோவில் திறப்பு (Ramar Temple Inauguration) குறித்த கேள்விக்கு, "ஏற்கனவே கலைஞர் சொன்னது போல மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. ராமர் கோவில் வந்தது பிரச்சனை அல்ல, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகாவிற்கு உடன்பாடு இல்லை. திமுக பொருளாளர் (டி.ஆர். பாலு) கூறியதை போல ஆன்மீகத்தையும், அரசியலையும் ஒன்றாக்க வேண்டும் என கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) கால் வலி காரணமாக ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த கேள்விக்கு, "அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது" என விமர்சித்தார்.
மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ