காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மருத்துவமனையில் சித்தியடைந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் ஜெயேந்திரர். கடந்த மூன்று மாதங்களாகவே உடல் நல குறைவுடன் காணப்பட்டு வந்துள்ளார் ஜெயேந்திரர்.
காஞ்சி மடத்தின் 69வது சங்கராச்சாரியாராக இருந்தவர் ஜெயந்திரர். இவருக்கு வயது 82. இவருடைய இறப்பை அறிந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் காஞ்சி மடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு எராளமான பொதுமக்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஜெயேந்திரருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டார் பக்கத்தில் ஜெயேந்திரருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- பூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
பூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
— Rajinikanth (@superstarrajini) February 28, 2018