'லஞ்சம்' கொடுக்கனும் ; ரூ4,809 கோடி கடன் கேட்டு ரிசர்வ் வங்கியை அலறவிட்ட தமிழன் !!

குடியரசு தலைவர் தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்க பணம் வேண்டுமாம்...ரிசர்வ் வங்கியிலே கடன் கேட்ட குடியரசு தலைவர் வேட்பாளர்

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 2, 2022, 10:52 AM IST
  • எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு காசு கொடுக்கனும்
  • வட்டியில்லாமல் எனக்கு கடன் கொடுக்கனும்
  • திரும்ப கொடுக்க நான் குடியரசு தலைவராகனும்
'லஞ்சம்' கொடுக்கனும் ; ரூ4,809 கோடி கடன் கேட்டு ரிசர்வ் வங்கியை அலறவிட்ட தமிழன் !!  title=

நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியை போல் உடை அணியும் வழக்கம் கொண்டவர். எந்த தேர்தல் வந்தாலும் அங்கு முதல் ஆளாய் வேட்புமனு தாக்கல் செய்து நூதனமான பிரச்சாரத்தை மேற்கொள்வது ரமேஷின் வழக்கம்.

Presidential candidate,Reserve Bank,loan,viral news, ரிசர்வ் வங்கி,லஞ்சம்

அதன்படி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலிலும் முதல் ஆளாய் காந்தி ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள தமக்கு 4 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடனாக கேட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்த பணத்தை கொண்டு  குடியரசு தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க உள்ள பிரதமர், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க உள்ளதாகவும் அதற்காக தன்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை வைத்து 4, 809 ரூபாய் வட்டியில்லா கடனாகவோ அல்லது மானியமாக வழங்க வேண்டும் என தெரிவித்து ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார். 

மேலும் படிக்க | Presidential Election 2022: இதுவரை எத்தனை கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன

ரமேஷின் மனுவை பார்த்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மனுவை பெற்று கொண்டு உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியிடம் கோடி கணக்கில் கடன் கேட்ட ரமேஷின் செயல் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | ரோட்டோர வைத்தியரிடம் வைத்தியம் பார்த்து வரும் தோனி! வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News